9 கோடி கொடுத்து எடுக்கப்பட்ட ஆல்ரவுண்டருக்கு இன்னைக்காவது வாய்ப்பு கிடைக்குமா ? – சி.எஸ்.கே முடிவு என்ன ?

CSK
- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் அணியாக சிஎஸ்கே அணி வெளியேறியது. அதன் பின்னர் இந்த ஆண்டு மீண்டும் சிஎஸ்கே அணி பலமாக திரும்பி வரும் என்று தோனி கூறியதைப் போலவே தற்போது முதல் அணியாக சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உறுதிசெய்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு விளையாடிய அணியில் பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஷேன் வாட்சன் ஓய்வு பெற்றபின்னர் சிஎஸ்கே அணிக்கு மொயின் அலி தேர்வானார். அதேபோல மற்றொரு முக்கிய மாற்றமாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணாப்பா கவுதம் சென்னை அணியால் வாங்கப்பட்டார்.

csk

இந்த மாற்றங்களைத் தவிர சென்னையில் பெரிய மாற்றங்கள் இல்லை. இருப்பினும் நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 9 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் அணியாகவும் சென்னை அணி பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள லீக் போட்டிகள் இந்த வாரம் முடிவடைய உள்ள நிலையில் இன்று 50வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் மோதுகின்றன.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியிலாவது 9 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ஒரு ஆல்ரவுண்டர்-க்கு வாய்ப்பு கிடைக்குமா ? என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் கிருஷ்ணாப்பா கவுதமை சிஎஸ்கே அணி 9 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ஆனால் அவரை ஏலம் எடுத்ததில் இருந்து இதுவரை அவர் அணியில் விளையாட வைக்கப் படவேயில்லை.

gowtham

கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரை சிஎஸ்கே அணி இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இதன் காரணமாக அவர் அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இதுவரை சி.எஸ்.கே அணிக்காக விளையாடவில்லை.

- Advertisement -

இருப்பினும் அவரை சிஎஸ்கே அணி நிச்சயம் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் எதாவது ஒரு போட்டியில் விளையாட வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சிஎஸ்கே அணி தற்போது இருக்கும் நிலையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் அந்த வகையில் கிருஷ்ணாப்பா கவுதம்-க்கும் இன்றும் வாய்ப்பு கிடைக்காது என்றும் தெரிகிறது.

இதையும் படிங்க : எப்படி பட்ட ஒரு வீரரை இப்படியா நடத்துவீங்க ? டேவிட் வார்னரின் நிலையை பார்த்த – ரசிகர்கள் சோகம்

9 கோடி கொடுத்து ஒரு ஆல்ரவுண்டரை ஏலம் எடுத்து இவ்வாறு வெளியிலேயே அமரவைத்து வருவது மோசமான முடிவு என்று தோன்றுகிறது. இருப்பினும் இந்த இரண்டு போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் அவர் விளையாடுவாரா ? என்பதை பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும்.

Advertisement