நோபால் வீசி சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் – இந்த விடியோவை பார்த்தா நீங்களே ஆமான்னு சொல்லுவீங்க

Santokie-1
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் டி20 தொடர் நடைபெறுவதை போன்று பல நாடுகளிலும் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் வங்கதேச பிரீமியர் லீக் தொடரை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான வங்கதேச பிரீமியர் லீக் கடந்த 11ம் தேதி தொடங்கியது.

Santokie

- Advertisement -

இந்த முதல் போட்டியில் சாட்டக்ரோம் சேலஞ்சர்ஸ் மற்றும் சில்ஹெட் தண்டர் ஆகிய இரண்டு அணிகளும் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய தண்டர் அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்களை குவிக்க சேசிங் செய்த சாட்டக்ரோம் சேலஞ்சர்ஸ் அணி 163 ரன்களை எட்டி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் தண்டர் அணியின் பந்துவீச்சாளரும், வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த வீரருமான கிரிஷ்மர் சண்டோகி வீசிய ஒரு பந்து தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ வைரலாக காரணம் யாதெனில் அவர் வீசிய வைட் நோ பால் சூதாட்டத்தின் காரணமாக வீசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில் எந்த ஒரு பந்துவீச்சாளரும் இவ்வளவு பெரிய வைட் நோபால் வீசமுடியாது.

மேலும் இவர் வீசிய திசையை பார்த்தாலே அது தெரியும். கீப்பர் எப்படியோ அதனை சாமர்த்தியமாக பிடித்து விட்டார். இருப்பினும் அந்த பந்தை சோதனை செய்து பார்க்கும்போது இது எதார்த்தமாக வீசப்பட்ட பந்தைப்போன்று தெரியவில்லை. ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டு இருக்கலாம் என்பது போன்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து பந்துவீச்சாளரிடம் விசாரணை நடத்தவும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement