- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய ஒருநாள் அணியில் இவங்க 2 பேருக்கும் சரியான வாய்ப்பு கிடைக்கல – சீக்கா ஸ்ரீகாந்த் ஆதங்கம்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தற்போது சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி தரம்சாலா நகரில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அந்த 2 பேருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கல : ஸ்ரீகாந்த்

இதன்மூலம் இந்திய அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டியானது நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்படாதது தவறு என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

அதோடு இந்திய ஒருநாள் அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை நிர்வாகம் சரியாக கையாளவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தாங்கள் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டியின் இன்னிங்சில் சதம் அடித்திருந்தனர்.

அப்படி அடித்தும் அவர்களுக்கு அணியில் தொடர்ந்து இடம் கிடைக்காதது குறித்து நிச்சயம் அவர்கள் யோசித்துக் கொண்டிருப்பார்கள். குறைந்தபட்சம் 15 பேர் கொண்ட அணியிலாவது அவர்களுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும். ஜெய்ஸ்வாலுக்கு மட்டும் விராட் கோலிக்கு பதிலாக மாற்றுவீரராக வாய்ப்பு கிடைக்குது. அதேவேளையில் ருதுராஜூக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : ரவீந்திர ஜடேஜா விடயத்தில் நிர்வாகம் இப்படி செய்றது முட்டாள் தனம் – சீக்கா ஸ்ரீகாந்த் விளாசல்

இதெல்லாம் மிகப்பெரிய தவறு வீரர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்க வேண்டியது அவசியம். அந்த வகையில் ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் ஆகியோர் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்திருக்க வேண்டும் என ஸ்ரீகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -