- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரவீந்திர ஜடேஜா விடயத்தில் நிர்வாகம் இப்படி செய்றது முட்டாள் தனம் – சீக்கா ஸ்ரீகாந்த் விளாசல்

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் 37 வயதான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி மட்டுமே இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்டது தவறு : சீக்கா ஸ்ரீகாந்த்

அந்த வகையில் டெஸ்ட் போட்டியில் இன்னும் தனது இடத்தினை இழக்காத ரவீந்திர ஜடேஜா ஒருநாள் போட்டிகளில் மெல்ல மெல்ல ஓரம் கட்டப்பட்டு விட்டார். இந்த ஆண்டு மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் வழங்கியதால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

- Advertisement -

அவருக்கு பதிலாக இளம் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்ஷ் துபே இடம் பெற்று விளையாடி வருகிறார். இதன் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 2027 உலக கோப்பை தொடரில் ஜடேஜா தேர்வு செய்யப்பட மாட்டார் என்று தெரிகிறது. இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவை ஒருநாள் போட்டிகளில் இருந்து நீக்கியது தவறு என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரவீந்திர ஜடேஜாவை தற்போதைய ஒருநாள் போட்டிகளில் இருந்து நீக்கியது தவறு. ஏனெனில் அவர் ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர், நிதீஷ் ரெட்டி வளர்ந்து வரும் ஆல்ரவுண்டர் எனவே ஹர்திக் பாண்டியா அணிக்குள் வந்ததும் அவர் விளையாட வாய்ப்பு இருக்காது.

- Advertisement -

இதையும் படிங்க : ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இவர்தான் புதிய ஓப்பனர் – வீரேந்திர சேவாக் கணிப்பு

அதேவேளையில் மற்றொரு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா தான் இருக்க வேண்டும். அவர் தற்போது பார்மில் இல்லை என்பதால் அவரை ஓரங்கட்டுவது தவறு. என்னைப் பொறுத்தவரை அவரே அடுத்த உலக கோப்பை தொடரில் முதன்மை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இருக்க வேண்டும் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -