- Advertisement -
ஐ.பி.எல்

பெஞ்சில் 47 கோடி.. பிளேயர்ஸ் மேல தப்பில்ல.. ஆர்சிபி தோல்விக்கு அவங்க தான் காரணம்.. ஸ்ரீகாந்த் விளாசல்

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முதல் கோப்பையை வெல்லும் கனவு மீண்டும் பாதி தகர்ந்துள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 6 தோல்விகளை பதிவு செய்து அந்த அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கிறது. அதனால் பிளே ஆஃப் செல்வதற்கே அடுத்த 7 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு பெங்களூரு தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக ஹைதராபாத்துக்கு எதிராக ஏப்ரல் 15ஆம் தேதி தங்களுடைய சொந்த ஊரில் நடந்த போட்டியில் மோசமாக பந்து வீசிய பெங்களூரு அணி 287 ரன்களை வாரி வழங்கியது. அதை சேசிங் செய்த அந்த அணிக்கு விராட் கோலி 42, கேப்டன் டு பிளேஸிஸ் 62, தினேஷ் கார்த்திக் 83 ரன்கள் எடுத்துப் போராடியும் இதர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர்.

- Advertisement -

ஸ்ரீகாந்த் விமர்சனம்:
அதனால் 25 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் பெங்களூரு பரிதாபமாக தோற்றது. இந்நிலையில் இந்த தோல்விகளுக்கு வீரர்கள் காரணமல்ல பெங்களூரு அணி நிர்வாகம் தான் காரணம் என்று முன்னாள் இந்திய கேப்டன் கிறிஸ் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ரீஸ் டாப்லி அடித்து நொறுக்கப்பட்டார். லாக்கி பெர்குசன் விளாசப்பட்டார். அவர் ஐபிஎல் தொடரில் அசத்தியதில்லை. வில் ஜேக்ஸ் ஆர்சிபி அணியின் சிறந்த பவுலர்”

“பேசாமல் அவர்கள் 11 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கலாம். டு பிளேஸிஸை 2 ஓவர்கள் வீசச் சொல்லுங்கள். கேமரூன் கிரீனுக்கு 4 ஓவர்கள் கொடுங்கள். ஒருவேளை விராட் கோலி 4 ஓவர்கள் வீசியிருந்தால் கூட இவ்வளவு ரன்கள் கொடுத்திருக்க மாட்டார். விராட் கோலி ஓரளவு நல்ல பவுலர். ஒரு கட்டத்தில் மைதானத்திற்கு வெளியே பறந்த பந்துகளை பார்த்து பரிதாபமாக நின்ற விராட் கோலிக்காக நான் வருத்தமடைந்தேன்”

- Advertisement -

“அதனாலயே அவர் வெறியுடன் பேட்டிங் செய்ய வந்தார். டிராவிஸ் ஹெட்டை தொடர்ந்து க்ளாஸென் அடித்து நொறுக்கினார். ஆனால் கடைசியில் அப்துல் சமத் விளையாடிய இன்னிங்ஸ் முக்கியமானதாக அமைந்தது. ஆர்சிபி அணி முகமது சிராஜ், மேக்ஸ்வெல் ஆகியோரை ட்ராப் செய்தனர். 17.50 கோடிக்கு வாங்கிய கேமரூன் கிரீனையும் 11.50 கோடிக்கு வாங்கிய அல்சாரி ஜோசப்பையும் அவர்கள் எடுக்கவில்லை”

இதையும் படிங்க: பவுலிங் மட்டும் பிரச்சனையில்ல.. எவ்ளோ காசு கொடுத்தாலும் அதை செய்யலன்னா ஆர்சிபி ஜெயிக்காது.. மைக்கேல் வாகன்

“இது போன்ற ஆர்சிபி அணி நிர்வாகத்திற்கு நான் தலை வணங்குகிறேன். தோல்விக்காக நான் ஆர்சிபி வீரர்களை குறை சொல்ல மாட்டேன். ஏலத்தின் போதே இப்படி திட்டமின்றி செயல்படும் ஆர்சிபி அணி நிர்வாகத்தை தான் நான் குறை சொல்வேன்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் சிராஜ், மேக்ஸ்வெல், ஜோசப், க்ரீன் என மொத்தம் 47 கோடி சம்பளம் வாங்கும் நட்சத்திர வீரர்கள் இப்போட்டியில் பெஞ்சில் அமர்ந்திருந்ததாக ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -