பாவம்யா விராட் கோலி.. 2023இல் சைலன்ட்டா அசத்திய ஜடேஜாவிடம் அந்த ஆர்வம் இல்லை.. விளாசிய ஸ்ரீகாந்த்

Kris Srikkanth
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்றது. குறிப்பாக நேற்று இந்தூரில் நடைபெற்ற 2வது போட்டியில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் முதல் முறையாக நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற தொடரில் இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது.

அப்போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 338 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இந்திய அணிக்கு ரோஹித், கில், ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 77/4 என தடுமாறிய இந்திய அணிக்கு விராட் கோலி நங்கூரமாக விளையாடி வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

சொதப்பிய ஜடேஜா:

அவருடன் நிதிஷ் ரெட்டி 53, ஹர்ஷித் ராணா 52 ரன்கள் எடுத்துப் போராடினார்கள். அதே போல 7வது இடத்தில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் கை கொடுத்திருந்தால் 124 ரன்கள் குவித்து கடைசி வரை போராடிய விராட் கோலி இந்தியாவை வெற்றி பெற வைத்திருப்பார் என்று சொல்லலாம். இருப்பினும் 16 பந்துகளை எதிர்கொண்ட ரவீந்திர ஜடேஜா 12 ரன்னில் அவுட்டானது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.

உண்மையை சொல்ல வேண்டுமெனில் ரவீந்திர ஜடேஜா தம்முடைய ஒருநாள் கேரியரில் இந்திய மண்ணில் வெறும் 2 முறை மட்டுமே (2009, 2013இல்) 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார். 2013க்குப்பின் ஒரு முறை கூட அவர் அரை சதமடித்ததில்லை. இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் சைலன்ட் கில்லராக அசத்திய ரவீந்திர ஜடேஜா இப்போதெல்லாம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆர்வத்துடன் விளையாடுவதில்லை என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

ஸ்ரீகாந்த் விளாசல்:

மேலும் விராட் கோலிக்காக பரிதாபப்படுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரவீந்திர ஜடேஜா 2023 உலகக் கோப்பையில் சைலன்ட் கில்லராக இருந்தார். ஆனால் அத்தொடரில் இருந்த உற்சாகம் இப்போது அவரிடம் இல்லை என்ற கருத்து உண்மை போல் தெரிகிறது. விராட் கோலிக்காக நான் பரிதாபப்படுகிறேன். எத்தனை போட்டிகளில் அவர் அடித்து கொடுப்பார்”

இதையும் படிங்க: விராட் கோலியை விட அந்த பையனின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது.. நிச்சயம் பயந்திருப்பாங்க – சீக்கா கருத்து

“ஒருவேளை விராட் கோலி தான் ரன்கள் அடிக்க வேண்டுமெனில் இந்தியாவால் எத்தனை போட்டிகளில் வெல்ல முடியும். இப்போதும் இந்திய அணி போட்டிகளை வெல்ல ஓரிருவரை சார்ந்துள்ளது. நியாயமாக சொல்ல வேண்டுமெனில் நியூசிலாந்தின் பவுலிங் கூட்டணி சிறப்பாக இல்லை. ஆனால் ஜெய்டேன் லெனோக்ஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். போல்க்ஸ் ரன்களை கொடுத்தாலும் விக்கெட்டுகளை எடுத்தார். ஜெமிசன் ஆபத்தான பந்தால் கில்லை அவுட்டாக்கினார். கிறிஸ்டியன் கிளார்க் நன்றாக பவுலிங் செய்தார்” என்று கூறினார்.

Advertisement