விராட் கோலியை விட அந்த பையனின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது.. நிச்சயம் பயந்திருப்பாங்க – சீக்கா கருத்து

Srikkanth and Harshit
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது நேற்று இந்தூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியானது 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதோடு இந்திய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

அந்த பையனோட ஆட்டம் பிரமாதமாக இருந்தது : கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

நேற்றைய போட்டியின் போது 338 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இந்திய அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் மட்டுமே குவித்ததால் நியூசிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 124 ரன்கள் அடித்திருந்தார்.

- Advertisement -

அதேவேளையில் விராட் கோலிக்கு அடுத்து நிதீஷ் ரெட்டி 53 ரன்களையும், ஹர்ஷித் ராணா 52 ரன்களையும் குவித்து விராட் கோலிக்கு உதவியிருந்தனர். இந்த போட்டியின் போது எட்டாவது வரிசையில் களமிறங்கிய ஹர்ஷித் ராணா 43 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி, 4 சிக்சர் என 52 ரன்கள் குவித்து சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது முதலாவது அரை சதத்தை பதிவு செய்திருந்தார்.

ஏற்கனவே ஹர்ஷித் ராணாவை இந்திய அணியில் வைத்திருப்பதற்கு காரணமே அவர் ஒரு பேட்டிங் தெரிந்த ஆல்ரவுண்டராக பயன்படுத்த போகிறோம் என்றுதான் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்றைய அவரது பிரமாதமான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஹர்ஷித் ராணா பேட்டிங் செய்த விதம் குறித்து தனது பாராட்டினை தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : விராட் கோலி ராஜாக்களின் ராஜா அவர் எப்போது விளையாடினாலும் சிறப்பாக இருக்கும். அந்தவகையில் நேற்றும் டாப் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ நிதீஷ் குமார் ரெட்டியுடன் சேர்ந்து அவர் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். அதன்பின்னர் ஹர்ஷித் ராணா பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. அவர் பேட்டிங் செய்த விதத்தை பார்த்ததும் நிச்சயம் நியூசிலாந்து வீரர்கள் பயந்திருப்பார்கள்.

இதையும் படிங்க : நிச்சயமா இந்த விடயம் விராட் கோலிக்கு ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும் – ஜாஹீர் கான் கருத்து

அவருடைய ஆட்டம் நேற்று மிகப் பிரமாதமாக இருந்தது. குறிப்பாக அவர் எளிதாக சிக்ஸ் அடிப்பதை பார்த்து வியந்து போனேன். அவர் நேற்று வேற லெவலில் பேட்டிங் செய்தார். நிச்சயம் அவரை பார்த்து நியூசிலாந்து வீரர்களும், கேப்டனும் பயந்திருப்பார்கள். அந்த அளவிற்கு அவருடைய ஆட்டம் பிரமாதமாக இருந்தது என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement