இதுக்கு பேசாம அக்சர் பட்டேலை செலக்ட் பண்ணலாமே? கம்பீரின் மற்றொரு அரசியல் தேர்வை விளாசிய ஸ்ரீகாந்த்

Kris Srikkanth
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து 2வது போட்டி ஜனவரி 14ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

முன்னதாக வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணிக்காக பவுலிங் செய்த போது வாஷிங்டன் சுந்தர் காலில் காயத்தைச் சந்தித்தார். அதனால் எஞ்சிய 2 போட்டிகளில் விலகியுள்ள அவருக்கு பதிலாக ஆயுஷ் படோனி சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லியைச் சேர்ந்த அவர் உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்கள் 20 விக்கெட்டுகளை கூட எடுத்ததில்லை.

- Advertisement -

கம்பீரின் தேர்வில் அரசியல்:

இருப்பினும் பெரியளவில் அனுபவமில்லாத அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. சமீப காலங்களாகவே இந்திய அணியில் கௌதம் கம்பீர் தமக்கு பிடித்த வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருவதாக விமர்சனங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக 2024 ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவிய ஒரே காரணத்திற்காக ராணாவுக்கு அவர் வாய்ப்புகளை அள்ளி வழங்கி வருவதை அனைவரும் அறிவோம்.

அதே போல 2022, 2023 ஐபிஎல் தொடர்களில் லக்னோ அணியில் கௌதம் கம்பீர் ஆலோசராக இருந்தார். அவருடைய வழிகாட்டுதலில் லக்னோ அணியில் விளையாடிய காரணத்தாலேயே தற்போது ஆயுஷ் படோனிக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இப்படிப்பட்ட உள்ளூர் ஆட்டத்தை வைத்துக்கொண்டு படோனிக்கு வாய்ப்பளிக்க வாய்ப்பில்லை”

- Advertisement -

ஸ்ரீகாந்த் விமர்சனம்:

“ஐபிஎல் தொடரிலும் அவருடைய ரெக்கார்ட் என்ன? ஐபிஎல் மற்றும் ஒருநாள் போட்டிகள் வித்தியாசமானது. அவற்றில் படோனி சிறப்பாக விளையாடவில்லை. அவர் ஒன்றும் எதிரணியிடமிருந்து வெற்றியைப் பறிக்கக்கூடிய வீரர் கிடையாது. அவரால் 6வது இடத்தில் களமிறங்கி சிக்ஸர்கள் அடிக்க முடியுமா? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”

“அவரை எப்படி நீங்கள் பவுலிங் ஆல் ரண்டராக கருத்தில் கொள்ள முடியும்? இது ஒரு குப்பையான தேர்வு. ஒருவேளை நீங்கள் ஆல் ரவுண்டர் வேண்டுமென்று விரும்பினால் ஏன் அக்சர் பட்டேலை தேர்ந்தெடுக்கக்கூடாது. அவர் ஆல் ஃபார்மட்டிலும் அசத்தக்கூடிய தனது திறமையை நிரூபித்த வெற்றிகரமான வீரர். அவருடைய சமீபத்திய ஆட்டத்தைப் பாருங்கள். தாமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவரை தேர்ந்தெடுக்காதது அநியாயம்”

இதையும் படிங்க: தோனி மாதிரி அந்த கஷ்டமான வேலையை.. ராகுல் கட்டுப்பாடுடன் செய்றாரு.. ஆகாஷ் சோப்ரா பாராட்டு

“இந்தத் தேர்வை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. லக்னோவில் ஆயுஷ் விளையாடிய போது கம்பீர் ஆலோசகராக இருந்தார். அது தான் இந்த தேர்வுக்கு காரணமா? எனவே என்னால் வேறு காரணத்தைப் பார்க்க முடியவில்லை. எதன் அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டுள்ளது?” என்று கூறினார்.

Advertisement