தோனி மாதிரி அந்த கஷ்டமான வேலையை.. ராகுல் கட்டுப்பாடுடன் செய்றாரு.. ஆகாஷ் சோப்ரா பாராட்டு

Aakash Chopra 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. வதோதராவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து 301 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைத் துரத்திய இந்திய அணிக்கு துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா 26, கேப்டன் 56 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார்கள். அதே போல நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 92, ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்கள் குவித்து வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவர்கள் அவுட்டானதும் வந்த ரவீந்திர ஜடேஜா சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பியதால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது.

- Advertisement -

தோனி போல ராகுல்:

அப்போது வந்த ஹர்ஷித் ராணா அதிரடியாக 29 (23) ரன்கள் குவித்து திருப்புமுனையை உணடாக்கினார். அதை வீணடிக்காமல் கே.எல். ராகுல் 29* (21), வாஷிங்டன் சுந்தர் 7* ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். அதையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் அவுட்டாகாமல் 13 போட்டிகளில் இந்தியா 13வது வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் சமீப காலங்களாக கேஎல் ராகுல் சத்தமின்றி தோனி போல நல்ல ஃபினிஷராக அசத்தி வருவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேஎல் ராகுலின் பேட்டிங் அணுகுமுறை சுவாரஸ்யமானதாக இருந்தது. அவரை நமக்கு அதிரடியான வீரராக தெரியும்”

- Advertisement -

ஆகாஷ் சோப்ரா பாராட்டு:

“ஆனால் அன்றைய சூழ்நிலையில் ராணா மற்றும் காயமடைந்த சுந்தருடன் இணைந்து அவர் வித்தியாசமாக பேட்டிங் செய்தார். பல சமயங்களில் அவர் அதிரடியான ஷாட்டுகளை அடித்து போட்டியை வேகமாக முடிப்பார் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் தமக்கான நேரத்தை எடுத்துக் கொண்ட அவர் 49வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்தார்”

இதையும் படிங்க: மிஸ்டர் கன்சிஸ்டன்ட்னா அது இவர்தான்.. இந்திய துணை கேப்டனை பாராட்டிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

“பொதுவாக அடித்து விளையாடக்கூடிய பந்துகளில் சிங்கிள் எடுத்த ராகுல் சரியான வாய்ப்புகளுக்காக காத்திருந்தார். அப்படி வித்தியாசமான வழியில் பன்முகத்தன்மையுடன் விளையாடுவது அவருடைய ஒரு பெரிய தரமாகும். அவரிடம் ஓப்பனிங், விக்கெட் கீப்பிங், தற்காலிக கேப்டன் உட்பட எந்த வேலையைச் சொன்னாலும் செய்வார். அதே போல டெத் ஓவர்களில் கிட்டத்தட்ட தோனி போல பதற்றத்தைக் கட்டுப்படுத்தி சேசிங்கையும் கட்டுக்குள் வைத்த ராகுலுக்கு தலைவணங்குகிறேன். நவீன கிரிக்கெட்டில் ஃபினிஷர் எனும் கடினமான வேலையில் அவர் சிறந்து விளங்குகிறார்” என்று கூறினார்.

Advertisement