2012இல் பறிக்கப்பட்ட அப்பாவின் போலீஸ் வேலையை.. மீட்டுக் கொடுத்த இந்திய வீராங்கனை.. வேற லெவல் சம்பவம்

Kranti Gaud
- Advertisement -

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையை ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் வென்று சாதனை படைத்தது. மேலும் மகளிர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்ற இந்திய அணி புதிய சரித்திரத்தையும் படைத்தது. அந்த வரலாற்று வெற்றியைப் பெற்றுக் கொடுத்த வீராங்கனைகளுக்கு அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த அரசுகள் பரிசுத் தொகை மற்றும் சன்மானங்களை வழங்கி வருகின்றன.

அந்த வகையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கிராந்தி கௌட் உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அவருக்கு மத்திய பிரதேச அரசாங்கம் சார்பில் ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அதை நேற்று மகாராஷ்டிரா மாநில முதல்வர் மோகன் யாதவ் அவரை நேராக வரவைத்து பாராட்டி வழங்கினார்.

- Advertisement -

பறிக்கப்ப்பட்ட வேலை:

அதற்கு முன்பாக மத்திய பிரதேச காவல்துறையில் முறையற்ற வகையில் தம்முடைய தந்தையின் வேலை பறிக்கப்பட்டது பற்றி கிராந்தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்துக்கு பேட்டி கொடுத்திருந்தார். தங்களுடைய சொந்த மாவட்டமான சத்தர்பூரில் 2012ஆம் ஆண்டு கான்ஸ்டபிளாக இருந்த கிராந்தி கௌட் தந்தை முன்னா சிங் யாதவ் தவறாக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தம்முடைய தந்தை வேலை இழந்ததால் இளம் வயதில் வளர்வதற்கு மிகவும் சிரமப்பட்டதாகவும் கிராந்தி கௌட் தெரிவித்திருந்தார். அதை அறிந்த முதல்வர் மோகன் யாதவ் பறிக்கப்பட்ட வேலை மீண்டும் க்ராந்தியின் தந்தைக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இது பற்றி பாராட்டு விழாவில் முதல்வர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

மீட்டுக்கொடுத்த மகள்:

“கிராந்தி மொத்த தேசத்தையும் பெருமையடைய வைத்துள்ளார். அவருடைய தந்தையின் கண்ணியமும் மீட்டெடுக்கப்படுவது சரியானதாக இருக்கும்” என்று கூறினார். அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த கிராந்தி தம்முடைய தந்தை காவல்துறை வேலையை இழந்ததால் சந்தித்த சிரமம் பற்றி இளம் வயதில் பாராட்டு விழாவில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: 417 ரன்ஸ் சேசிங்கில்.. ஒரே நாளில் இந்தியா ஏ அணியை பொளந்த தெ.ஆ.. மாஸ் வெற்றியுடன் சமன் பதிலடி

“நீங்கள் எப்போதாவது விட்டுக் கொடுக்க நினைத்தால் உங்கள் கனவுகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். சில நேரங்களில் நாங்கள் ஒரு நாளில் ஒருவேளை மட்டுமே சாப்பிட்டோம். ஆனால் அப்போதும் கூட நான் என்னுடைய கனவுகளை விட்டுக் கொடுக்கவில்லை. அதனால் இன்று என் குடும்பத்திற்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளேன். அதற்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று கூறினார். அந்த வகையில் தமது தந்தை இழந்த அரசு வேலையை மகள் இந்தியாவுக்காக உலகக் கோப்பை வென்று மீட்டுக் கொடுத்துள்ளது வேற லெவல் நிகழ்வாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement