ராஜஸ்தானை வீழ்த்தியதற்கு இவர்கள் தான் காரணம்..? தினேஷ் கார்த்திக் பாராட்டு..! – யார் தெரியுமா..?

karthik
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதி சுற்றிற்கான எலிமினேஷன் போட்டி நேற்று (மே 23 ) நடைபெற்றது. கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய இந்த போட்டியில் கொல்கத்தா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்களை பாராட்டியுள்ளார் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் தினேஷ் கார்த்திக்.

dinesh

- Advertisement -

நேற்று கொல்கத்தா ஏடன் கார்த்தேன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீலடிங்கை தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்கார்களான சுனில் நரேன் மற்றும் க்றிஸ் லின் ஆகிய இருவருமே சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய 3 வீரர்களும் ஒற்றை படை ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டும் பொறுப்பாக ஆடி 38 பந்துகளில் 52 ரன்களை எடுத்தார். அவருக்கு இணையாக ஆடிய அந்த அணியின் பந்துவீச்சாளர் ரஸல் 25 பந்துகளில் 49 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் இறுதியில் கொல்கத்தா அணி 20 வர்கள் முடியில் 169 ரன்களை எடுத்திருந்தது.பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டை இழந்து 20 ஓவர்களில் 144 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியடைந்து.

Andre

அந்த அணியில் 6 விக்கெட்டுகள் கைவசமிருந்தும் அந்த அணியால் வெற்றி பெற முடியாமல் போனதற்கு காரணம் கொல்கத்தா அணியின் சிறப்பான பந்து வீச்சு தான். இந்த போட்டி முடிந்து பேசி தினேஷ் கார்த்திக் கூறுகையில் “170 ரன்கள் என்ற இலக்கு எளிதாக எடுத்து விடலாம் என்றாலும், எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறபாக செயல்பட்டனர். எங்கள் அணி முதலில் கொஞ்சம் திணறியது பின்னர் எப்படியோ நாங்கள் சமாளித்துக் கொண்டோம்.எங்கள் அணி பந்து வீச்சாளர்கள் மிகவும் நேர்த்தியாக பந்து வீசினார்கள் ” என்று கூறியிருந்தார்.

Advertisement