கொல்கத்தா பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு – செம ஆஃபர் கொடுத்த கங்குலி அன்கோ

Ground
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது கிரிக்கெட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணிக்கு முடியும்.

Ind

- Advertisement -

இந்த போட்டியை காண பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் வருவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த போட்டியை அதிக அளவு ரசிகர்கள் கண்டுகளிப்பதற்காக கங்குலி தலைமையிலான பிசிசிஐ தற்போது அதிரடி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த போட்டியை காண ஒரு நாள் டிக்கெட் ரூபாய் 50, 100 மற்றும் 150 என குறைந்த விலையில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் அதிகமான ரசிகர்களை கவரும் விதமாகவும் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியாகவும் இது இருப்பதால் இந்த அதிரடி ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் ஐந்து நாட்களும் இதே அளவிலான டிக்கெட் விலையே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஈடன் கார்டன் மைதானத்தில் 68,000 சீட்டுகளும் நிறைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் அம்மாநில கிரிக்கெட் சங்கம் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் தற்போது ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர். மேலும் கண்டிப்பாக இந்த போட்டி உலக கவனத்தை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement