IND vs BAN : இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு. இந்திய அணியில் 2 மாற்றங்கள் – கோலி

உலககோப்பை தொடரின் 40 ஆவது போட்டி இன்று எட்ஜ்பாஸ்டன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், மோர்தசா தலைமையிலான வங்கதேச

Kohli
- Advertisement -

உலககோப்பை தொடரின் 40 ஆவது போட்டி இன்று எட்ஜ்பாஸ்டன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், மோர்தசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதுகின்றன.

ind vs ban

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டி துவங்குவதற்கு முன் இந்திய அணியின் மாற்றங்களை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

அதன்படி சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதாவிற்கு பதிலாக புவனேஸ்வர் குமார் அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும் தொடர்ச்சியாக பேட்டிங்கில் ஏமாற்றிவரும் ஜாதவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த இரண்டு மாற்றங்களையும் இந்திய அணியின் கேப்டன் கோலி டாஸ் போட்டபின்பு தெரிவித்தார்.

Karthik

இன்றைய போட்டியில் இந்தியா ஜெயிக்கும் பட்சத்தில் அரையிறுதிக்கு நேரடியாக முன்னேறும் அதேபோன்று வங்கதேச அணியின் எஞ்சியுள்ள இரு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் இந்த இருஅணிகளும் இந்த போட்டியில் வெற்றிக்காக விளையாடும் என்பதில் ஐயமில்லை.

Advertisement