என்னதான் 78 ரன் அடிச்சாலும் கோலியை துரத்தும் சோகம். ஏன் இப்படி நடக்குது ? – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 340 ரன்கள் குவித்தது.

Dhawan-1

- Advertisement -

துவக்க வீரர்களான ரோகித் சர்மா 42 ரன்களும், தவான் 96 ரன்கள் குவித்தனர். அதன்பின்னர் கேப்டன் கோலி மீண்டும் மூன்றாவது வீரராக களமிறங்கி 76 பந்துகளில் 78 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னரே இறுதி நேரத்தில் ராகுல் அதிரடியாக விளையாடி 80 ரன்களை குவிக்க இந்திய அணி 340 என்ற சிறப்பான ஸ்கோரை எட்டியது.

இந்நிலையில் இந்த போட்டியிலும் கோலி சிறப்பாக ஆடினாலும் அவரின் சோகம் இன்றும் தொடர்ந்தது என்றே கூறலாம். அது என்னவெனில் ஆடம் ஜாம்பா விற்கு எதிராக அடிக்கடி ஆட்டம் இழக்கும் கோலி சென்ற போட்டியின் [போதும் அவரிடம் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Zampa 1

தொடர்ச்சியாக இந்த தொடரில் இரண்டாவது முறை ஆட்டமிழந்துள்ளார். மேலும் இதுவரை 12 போட்டிகளில் ஜாம்பாவிற்கு எதிராக விளையாடியுள்ள கோலி அதில் ஐந்து முறை அவரிடம் ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement