எங்களின் நம்பர் 1 அந்தஸ்தை நாங்கள் பகிர்ந்தால் அது இவர்களுடன் மட்டும் தான் – கோலி வெளிப்படை

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவை முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை 21ம் தேதி வெலிங்டன் மைதானத்தில் காலை 4 மணிக்கு துவங்க உள்ளது.

INDvsNZ

- Advertisement -

இந்நிலையில் இதற்கு முன்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பெரிய வேறுபாடு இல்லை என்றும் இரண்டு அணிகளுமே வீழ்த்த விரும்பும் அணிகளாக இருக்கின்றன என்று விராட்கோலி குறிப்பிட்டார்.

மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பவுண்டரி லைனில் அமர்ந்து என்ன பேசினார்கள் ? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலாக அவர் வில்லியம்சன் கிரிக்கெட் தொடர்பாக எதுவும் பேசவில்லை. வாழ்க்கை தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக கூறினார்.

மேலும் இந்திய அணி ஓர் அணியுடன் நம்பர் ஒன் இடத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அது நிச்சயம் நியூசிலாந்து அணி ஆகத்தான் இருக்கும். நியூசிலாந்து அணி வீரர்களின் ஒழுக்கமும், அன்பும் மிகவும் பிடித்தது. மேலும் இது கிரிக்கெட் உலகிற்கு நன்றாக தெரிந்த ஒரு விடயம் தான். எனவே எங்களது நம்பர் ஒன் இடத்தை பகிர வேண்டும் என்று நாங்கள் விரும்பினால் அது நிச்சயம் நியூசிலாந்துக்கு தான் இருக்கும் என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement