தோனியுடன் சேர்ந்து நான் இதை பண்ணனும். அப்புறம் ஐ.பி.எல் கோப்பையை ஜெயிக்கனும் – மனம்திறந்த கோலி

Kohli
- Advertisement -

டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அந்நாட்டில் பெரும் அழிவை உண்டாக்கி அதன் பிறகு உலகம் முழுவதும் அதிவேகமாகப் பரவியது. இதனால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த வைரஸ் மெல்லமெல்ல இந்தியாவிலும் தனது ஆதிக்கத்தை தொடங்கியுள்ளது.

kohli

- Advertisement -

இதன் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகள் மற்றும் அரசாங்க நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் என அனைத்தும் தடை செய்யப்பட்டது. மேலும் திரையரங்கம், மால்கள் பார்க் என பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

மேலும் இந்தியா முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தற்போது நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரும் தள்ளி போய் உள்ளது. மேலும் இந்த தொடர் ரத்தாகும் வாய்ப்பு உள்ளதால் வீரர்கள் வீட்டிற்குள்ளேயே தங்களது நேரத்தை கழித்து வருகின்றனர்.

dhoni

இந்நிலையில் தற்போது தங்களது நேரத்தை சமூகவலைதளத்தில் கழித்து வரும் வீரர்கள் அதில் பல சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் உடன் லைவ் சேட்டில் ஈடுபட்ட இந்திய அணியின் கேப்டன் கோலி அவரது விருப்பம் குறித்தும் தனது லட்சியம் குறித்தும் தனது கருத்தினை அவருடன் பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

அதன்படி அவர் கெவின் பீட்டர்சன் உடன் பேசிய வீடியோ சேட்டிங்கில் கோலி கூறியதாவது : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் இணைந்து பேட்டிங் செய்வது தான் தனக்கு எப்போதும் விருப்பமான ஒன்றாகும் எனவும் மேலும் ஐபிஎல் தொடரை வென்று பெங்களூரு அணி ஒரு முறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்றும் அதுவே தனது லட்சியம் என்றும் கூறினார்.

dhoni

கோலி தனது கருத்தினை பகிர்ந்துக் கொண்ட இந்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கொரோனா மட்டும் இல்லை என்றால் இந்நேரத்திற்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் உங்களோடு நேரத்தை கழித்து இருப்பேன் என்று கோலி உரையாடியது குறிப்பிடத்தக்கது

Advertisement