
இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது. அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கலந்துகொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது தோனி குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் தோனியின் ஓய்வு எப்பொழுது என்றும் அவர் எங்கு இருக்கிறார் என்று கோலியிடம் கேட்டார்.
அப்போது அதற்கு தோனியின் பாணியிலே சிரித்துக்கொண்டு உங்களுக்கு தோனி எங்கு இருக்கிறார் என்று தெரியவேண்டுமா ? அவர் இங்கு தான் இருக்கிறார் அதோ ஓய்வறையில் தோனி இந்திய வீரர்களுடன் இருக்கிறார் வேண்டும் என்றால் அவரிடம் சென்று ஹலோ சொல்லுங்கள் என்று சிரித்துக்கொண்டே சொல்ல அங்கிருந்த நிருபர்கள் அனைவரும் சிரிக்க தொடங்கிவிட்டனர்.
இன்று காலை போட்டி தொடங்கும் முன்னரே தோனி இந்திய அணி வீரர்களுடன் ஓய்வறையில் பேசிக் கொண்டிருந்தார். மேலும் இந்த போட்டியை காணவும் அவர் இன்று நேரில் வந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே முடிந்ததால் இந்திய அணி வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்திலும் தோனி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.