இவரை மாத்த வேண்டிய அவசியம் இல்ல. அணியின் பலம் தான் முக்கியம் – பண்டிற்கு ஆப்பு வைத்த கோலி

Pant
- Advertisement -

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பண்ட் அறிமுகமான போது தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அதனைத் தொடர்ந்து கடந்த பல தொடர்களாக தொடர்ந்து அவரது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டுமே சொதப்பலாக அமைந்து வருவதால் அவர் மீது அடுத்தடுத்து விமர்சனங்கள் எழுந்தன.

Pant 1

- Advertisement -

இந்நிலையில் தற்போது நடந்த ஆஸ்திரேலிய தொடரிலும் அவர்தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் என்று கூறி அணி நிர்வாகம் அவரை களமிறக்கியது. முதல் போட்டியில் கம்மின்ஸ் வீசிய பந்தில் தலையில் காயமடைந்து வெளியேறிய அவர் அடுத்து இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில் தற்போது இந்த இரண்டு போட்டிகள் அவரை மோசமான நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளது.

ஏனெனில் இந்த இரண்டு ஆட்டங்களாக இந்திய அணியில் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்தார். இரண்டு போட்டியிலும் கீப்பிங்கில் ஓரளவு சிறப்பாக செயல்படும் ராகுல் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் கோலி ராகுல் குறித்து கூறியதாவது : ராகுல் விக்கெட் கீப்பிங் செய்யும்போது கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அணியில் சேர்த்து பேட்டிங் ஆர்டரை பலப்படுத்த முடிகிறது.

Rahul

மேலும் இந்த இரண்டு போட்டிகளிலும் ராகுல் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்துள்ளார். அவரை மாற்றாமல் இன்னும் சில போட்டிகளில் விக்கெட் கீப்பராக பரிசோதனைக்காக தொடர வைக்க போகிறோம். அதற்குள் எந்தவித மாற்றங்களையும் நாங்கள் அவசரப்பட்டு செய்யப்போவதில்லை. இதனால் இப்போது ஆடிவரும் அணியை மாற்றாமல் அப்படியே கொண்டு செல்ல இருக்கிறோம்.
அணியின் பேலன்ஸ் தான் முக்கியம்.

கடந்த 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ராகுல் டிராவிட் கீப்பிங் செய்ததால் எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் அணியில் இடம் பிடித்தார். அதனை போன்று தற்போது ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வதால் ஒரு பேட்ஸ்மேனை கூடுதலாக நாம் சேர்க்க முடியும். மேலும் ராகுல் எந்த இடத்தில் ஆடினாலும் சிறப்பாக ஆடுகிறார் என்பதால் அவரைப் பற்றிய பிரச்சனை இல்லை என்று கோலி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement