RCB vs DC : டிரஸ்ஸை மாத்தினால் மட்டும் போதுமா ? பெங்களூரு அணி இதனையும் மாற்றவேண்டும் – ரசிகர்கள் புலம்பல்

ஐ.பி.எல் தொடரின் 20 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு பெங்களூருவில் துவங்கியது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும்

Kohli
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 20 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு பெங்களூருவில் துவங்கியது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன.

Green

- Advertisement -

பெங்களூரு அணி இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்து உள்ளன. அதனால் இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெற உத்வேகம் காட்டும் என நம்பப்பட்டது.

ஆனால், பெங்களூரு அணி இந்த போட்டிக்காக தனது சீருடையை மாற்றியதே தவிர ஆட்டத்தின் போக்கை மாற்ற தவறியது. சென்ற போட்டியில் விளையாடிய அதே அணியோடு விளையாகிறது. டெல்லி அணியில் இருக்கும் இளம் வீரர்களை கணக்கில் கொள்ளும்போது கோலியின் அணி சுத்தமாக பலமின்றி அனைத்து துறைகளிலும் வலுவிழந்து காணப்படுகிறது.

Ali

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்த டெல்லி அணி சிறப்பாக பந்துவீசி பெங்களூரு அணியை சுருட்டியது. பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக கோலி 41 ரன்களை அடித்தார். டெல்லி அணி சார்பாக ரபாடா சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களுக்கு 21 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் டெல்லி அணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு போன்ற சிறிய மைதானத்தில் இந்த இலக்கு போதுமானது இல்லை. இதனால் பெங்களூரு அணி ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளனர். சீருடையை மாற்றினால் மட்டும் போதுமா ? சரியான வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களை அணியில் சேர்த்து வீரர்களிடையேவும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement