போட்டியின் கடைசி நாளில் இந்திய வீரர்களிடம் விராட் கோலி கூறிய வார்த்தைகள் – என்ன தெரியுமா ?

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தில் கடைசி நாளில் முடிவடைந்தது. இந்த போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அணி 292 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய அதனை தொடர்ந்து 60 ஓவர்களில் 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணையிக்கப்பட்டது.

shami 2

- Advertisement -

இதன் காரணமாக எந்த அணி வெற்றி பெறப் போகிறது ? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து அதிகரித்தது. ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து 89 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர்.

அதன் பின்னர் இந்த 60 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே வெற்றி என்ற கட்டாயத்தில் களமிறங்கியது. அப்போது இந்திய அணி வீரர்களுக்கு கேப்டன் கோலி 4வது இன்னிங்சில் முன்னர் சில அறிவுரைகளை வழங்கினார். அதில் கோலி கூறுகையில் : இந்த இன்னிங்சில் 60 முழு ஓவர்கள் நம்மிடம் இருக்கின்றன. எதிரணியினர் நம்மிடமிருந்து நெருப்பை உணர வேண்டும் என்று கூறி வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுத்தார்.

siraj 1

அவர் கூறியதைப் போலவே முதல் ஓவரில் இருந்தே இந்திய அணியின் பந்து வீச்சில் அனல் பறந்தது. முதல் ஓவரிலேயே பும்ரா முதல் விக்கெட்டை வீழ்த்த அதன் பின்பு ஷமி, இஷாந்த், சிராஜ் என ஒருபக்கம் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்தனர். இறுதியில் 52 ஆவது ஓவரிலேயே இந்திய அணியானது இங்கிலாந்து அணியின் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

bumrah 1

இந்த இரண்டாவது இன்னிங்சில் சிராஜ் 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு உண்மையிலேயே வெப்பத்தை உணர வைத்தனர் என்று கூறலாம். இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் இறுதிவரை வெற்றி உத்வேகத்துடன் விளையாடி இறுதியில் வெற்றியும் பெற்றுக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement