Worldcup : தோனி படையை விட கோலியின் படை இந்த விடயத்தில் சிறப்பாக உள்ளது – பயிற்சியாளர் பேட்டி

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Kohli
- Advertisement -

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

kohli

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. இன்னும் சில நாட்களில் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

தற்போது தோனி தலைமையிலான இந்திய அணிக்கும் மற்றும் கோலி தலைமையிலான இந்திய அணிக்கும் உள்ள வித்தியாசத்தினை முன்னாள் மனநல பயிற்சியாளரான பாடி அப்டன் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி உலக கோப்பையை கைப்பற்றியது அப்போது இருந்த தோனியின் அணி சிறப்பான அணி என்று அனைவரும் கூறிவந்தனர்.

ஆனால் அதன் பிறகு இந்திய அணி பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. தற்போதுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் முழு பலத்துடன் விளங்குகிறது. இந்த உலகக் கோப்பை தொடரை வெல்ல கோலியின் தலைமையிலான அணிக்கு அனைத்து தகுதியும் உள்ளது தோனி தலைமையிலான அணி இருக்கும்பொழுது பேட்டிங் சிறப்பாக இருந்து பந்துவீச்சு ஓரளவு சுமாராக இருந்தது. ஆனால் தற்போது கோலியின் தலைமையிலான அணியில் பேட்டிங் பவுலிங் என இரண்டு பிரிவிலும் இந்திய அணி கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.

Advertisement