Virat Kohli : இந்திய அணியில் இந்த ஒரு மாற்றம் தான். அதுவும் இதற்காகத்தான் – கோலி பேட்டி

உலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான்

Kohli
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

India v Pakistan

இந்தப் போட்டிக்கான வரவேற்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக காணப்பட்ட நிலையில் போட்டி தற்போது துவங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி களம் இறங்க தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் டாஸ் போடப்பட்ட பிறகு இந்திய அணியின் மாற்றங்களைப் பற்றி விராட் கோலி பேட்டி ஒன்றை அளித்தார். அதில் கோலி கூறியதாவது : உண்மையில் சொல்லப்போனால் இந்த போட்டியில் நாங்கள் முதலில் பந்து வீசவே விரும்பினோம். ஏனெனில் இந்த மைதானம் பந்துவீச்சுக்கு ஏற்றவாறு இருக்கும் அது மட்டுமின்றி நம் அணியில் இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் உள்ளனர். இருப்பினும் இங்கு பேட்டிங் முதலில் செய்வது நல்லது தான்.

Vijay-Shankar

இந்த போட்டியின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. ஆனால் தற்போது போட்டியினை விளையாடுவது மட்டுமே சிந்திக்க வேண்டும். இந்த போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றத்தில் தான் செய்துள்ளோம். அதன்படி ஷிகர் தவானுக்கு பதிலாக விஜய்சங்கர் அணியில் இணைந்துள்ளார். ஏனெனில் இவர் ஒரு நல்ல பேட்ஸ்மன் அதுமட்டுமின்றி பீல்டிங்கும் சிறப்பாக செய்யக்கூடியவர். அதுவுமின்றி அணிக்காக சில ஓவர்கள் இவர் வீசுவார் எனவே இவரை தேர்வு செய்தோம் என்று கோலி கூறினார்.

Advertisement