Virat Kohli : தோற்றாலும் இவர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி – கோலி உருக்கம்

ஐ.பி.எல் தொடரின் 54 ஆவது போட்டி சின்னசாமி மைதானத்தில் பெங்களூருவில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், வில்லியம்சன் தலைமை

Kohli-1
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 54 ஆவது போட்டி சின்னசாமி மைதானத்தில் பெங்களூருவில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

williamson

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது பெங்களூரு அணி. அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 70 ரன்களை குவித்தார்.

இதனால் 176 ரன்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் பின்னர் ஆடிய பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹெட்மயர் 75 ரன்களும், குர்கிரத் சிங் 65 ரன்களையும் குவித்தனர். ஹெட்மயர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Hetmyer

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கோலி கூறியதாவது : இந்த தொடரில் முதல் 6 போட்டிகளை தோற்றபின் மீண்டும் போட்டிகளில் வெற்றி பெற்று திரும்புவது மிகவும் கடினம். தொடரின் இரண்டாம் பாதியில் 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். கடந்த சில போட்டிகளாக எங்களது அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Hetmyer 1

நானும், டிவிலியர்ஸும் அவுட் ஆன பின் எதிரணியினர் போட்டியினை சுலபமாக நினைத்தார்கள். ஆனால், ஹெட்மயர் மற்றும் குர்கீரத் அருமையாக ஆடி வெற்றியை பெற்றுத்தந்தனர். ஒவ்வொரு வருடமும் பெங்களூரு ரசிகர்கள் நாங்கள் தோற்றாலும் பெருமளவு ஆதரவு தருகின்றனர். இவர்களை போன்ற ரசிகர்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி. அடுத்த ஆண்டு மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி எங்களது அணி ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவோம். எங்கள் மீது இவ்வளவு அன்பு காட்டும் அனைத்து பெங்களூரு அணி ரசிகர்களுக்கும் நன்றி என்று கோலி கூறினார்.

Advertisement