அரையிறுதி போட்டியில் யாருடன் மோதினாலும் அவர்களுக்கும் இதுதான் நடக்கும் – கோலி அதிரடி

Kohli
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 44 ஆவது லீக் போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 264 ரன்களை குவித்தது அதிகபட்சமாக மேத்யூஸ் 113 ரன்கள் குவித்தார்.

பிறகு 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர். ஆட்ட நாயகனாக ரோகித் தேர்வானார்.

போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : நாங்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறோம் என்று நினைக்கிறேன். எங்களது நிலையான இந்த சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் எங்களது பயிற்சி என்றே நான் கருதுகிறேன். இந்திய அணிக்கு தலைமை தாங்குவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அரையிறுதிக்கு நாங்கள் அபாரமான வெற்றியுடன் தகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ind

எதிரணி எதுவாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எந்த அணி எதிரணியாக இருந்தாலும் அவர்களை எங்களால் எளிதாக வீழ்த்த முடியும். எந்த அணியாக இருந்தாலும் நாங்கள் நல்ல ஆட்டத்தை விளையாடவே விரும்புகிறோம் அதனால் அரையிறுதி போட்டியில் எந்த அணி வந்தாலும் அந்த அணி எங்களால் வீழ்த்த முடியும் என்று கோலி கூறினார்.

Advertisement