போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றிருக்க கூடாது. இந்த தவறை நாங்கள் திருத்த வேண்டும் – கோலி பேட்டி

Kohli
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் அடித்தது.

- Advertisement -

துவக்க வீரர்கள் படிக்கல் 54 ரன்களும், பின்ச் 52 ரன்களும் அடித்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த கோலி 3 ரன்களுக்கு ஆட்டம் இருந்தாலும் டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடி 55 ரன்களும், துபே 27 ரன்கள் அடித்து அணி அணியின் ரன் குவிப்புக்கு உதவினர். அதனைத்தொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி துவக்கத்தில் ரோகித் சர்மா 8 ரன்கள், டிகாக் 14 ரன்கள், சூர்யகுமார் யாதவ் டக் அவுட் என 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.

ஆனால் பின்னால் நங்கூரம் பாச்சிய இஷான் கிஷன் மற்றும் பொல்லார்ட் ஜோடி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்ற கட்டத்திலிருந்து போட்டியை சிறப்பாக இறுதிவரை கொண்டுசென்றனர். 5 ஓவருக்கு 90 ரன்கள் தேவை என்ற நிலையிலிருந்து போட்டியை “டை” ஆக்கினார்கள். இஷன் கிஷன் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பொல்லார்ட் 60 ரன்கள் அடித்து இறுதிவரை களத்தில் இருந்தார். இரு அணிகளும் 201 ரன்களை குவித்தது போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேட்டியளித்த பெங்களூரு அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : இப்போதைக்கு சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த போட்டி ரோலர் கோஸ்டர் போல் சென்று முடிவடைந்துள்ளது. மும்பை அணி வீரர்கள் சிறப்பாக மிடில் ஓவர்களில் பதட்டமின்றி நிதானமாக விளையாடினார்கள். நாங்கள் இந்த போட்டியில் எங்களது திட்டத்தை செய்தோம். போட்டியும் வெற்றி அருகே சென்றது. ஆனாலும் பீல்டிங்கில் செய்த சிலர் சில தவறுகளை நாங்கள் சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.

- Advertisement -

இன்னும் பில்டிங்கை மேம்படுத்த நாங்கள் உழைத்தாக வேண்டும். சரியான நேரத்தில் பொல்லார்ட்டின் கேட்சை பிடித்திருந்தால் போட்டி சூப்பர் ஓவர் வரை செல்லாமல் ஜெயித்திருப்போம். இந்த போட்டி மிகவும் ரசிகர்களுக்கு சிறப்பாக அமைந்திருக்கும். ஆனால் கேப்டன்களுக்கு பதட்டமான ஒன்றாக அமைந்தது. மேலும் பும்ராவிக்கு எதிரான சூப்பரா வரும் சிறப்பான ஒன்றாக அமைந்தது. தரமான போட்டிகளில் இது போன்ற விடயங்களை ரசிகர்கள் பார்ப்பது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

udana

பவர் பிளே ஓவர்களில் சுந்தர் சிறப்பாக வீசி எங்களுக்கு சாதகத்தினை கொடுத்தார். மொத்தத்தில் பெங்களூரு அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அதிலும் சூப்பர் ஓவரில் சைனி மிகச் சிறப்பாக பந்து வீசினார். யார்க்கர் மற்றும் ஸ்டம்புக்கு வெளியே வைடான பந்துகளை அவர் வீசினார். இந்த வெற்றி எங்களுக்கு அடுத்த கட்டத்திற்கு ஒரு உந்து கோலாக அமையும் என்று விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement