Virat Kohli : பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் இவராலே வெற்றி கிடைத்தது – கோலி பெருமிதம்

உலக கோப்பை தொடரின் 12ஆவது போட்டி நேற்று மதியம் ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும்

Kohli
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 12ஆவது போட்டி நேற்று மதியம் ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தநிலையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ind vs aus

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் தவான் 117 ரன்களும், கோலி 82 ரன்களும் எடுத்தனர்.

அதன்பின்னர் 353 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 316 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்மித் 69 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பாக புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சதமடித்த தவான் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Dhawan

போட்டி முடிந்து இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய கோலி கூறியதாவது : இந்த வெற்றி மிகவும் உயர்தரமான வெற்றியாகும். ஏனெனில் இந்தியாவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடைந்த தோல்விக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இந்த போட்டியில் முதல் பந்தில் இருந்து சிறப்பாக விளையாடினோம் துவக்க பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தது.

Bhuvi

பாண்டியா மற்றும் தோனி மிகச் சிறப்பாக அதிரடியாக ஆடினார்கள் 350 ரன்களுக்கு மேலாக அடித்தது நிம்மதி அளித்தது. இந்த போட்டியில் புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்து வீசினார் அவர் நிச்சயம் ஒரு சாம்பியன் பவுலர் என்பதை இந்த போட்டியின் மூலம் நிரூபித்துள்ளார். பழைய பந்தாக இருந்தாலும் சரி புதிய பந்தாக இருந்தாலும் சரி அதில் புவனேஸ்வர்குமார் விக்கெட் எடுப்பார் இந்த போட்டியில் திருப்புமுனையாக அவர் எடுத்த இரண்டு விக்கெட்டுகள் அமைந்தது என்று கோலி கூறினார்.

Advertisement