இவர் ஒருவரால் தான் நாங்கள் சிறப்பான வெற்றியை பெற்றோம் – விராட் கோலி புகழாரம்

Kohli
- Advertisement -

ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வார்னர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்களை குவித்தது அதிகபட்சமாக அறிமுக வீரர் படிக்கல் 56 ரன்களும் டிவில்லியர்ஸ் 51 ரன்களும் அடித்தனர்.

padikkal

- Advertisement -

அதன் பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி மணிஷ் பாண்டே பேர்ஸ்டோ ஆகியோர் விளையாடிய விதத்தை பார்க்கும் போது எளிதில் வெற்றி பெறும் என்று நினைத்தனர். ஆனால் இறுதியில் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் விழுந்து 153 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக பேர்ஸ்டோ 61 ரன்கள் குவித்தார். இதனால் பெங்களூரு அணி 10 ரன் வித்தியாசத்தில் இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றி பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் கோலி கூறுகையில் : கடந்த வருட முடிவுகளுக்குப் பிறகு தற்போது வெற்றியுடன் ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

chahal

சாஹல் இந்த போட்டியில் ஆட்டத்தை அப்படியே எங்கள் பக்கம் திருப்பி விட்டார். அவர் தன்னுடைய ஸ்கில்ஸ்ஸை மைதானத்தில் வெளிப்படுத்தினார். எந்த ஒரு மைதானத்திலும் அவரால் சிறப்பாக பந்து வீச முடியும் என்பதை நிரூபித்துள்ளார். மேலும் அவர் பந்து வீசிய இடங்கள் அனைத்தும் பேட்ஸ்மேன்களை திணற வைத்தது.

chahal 1

என்னை பொறுத்தவரை தனியொருவராக இந்த போட்டியை முற்றிலுமாக திருப்பினார் என்றால் அது சாஹல் தான். அவராலே வெற்றி சாத்தியமானது என்று கோலி குறிப்பிட்டார். மேலும் இந்த போட்டியில் 160 ரன்கள் என்பது போதுமானதுதான் இருப்பினும் பவுலிங்கிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஷிவம் துபே தனது 3 ஓவர்களை சிறப்பாக வீசினார் என்று கோலி கூறினார்.

Advertisement