இந்த ஒரு விஷயத்தில் சமரசம் என்பதே கிடையாது. வருண் சக்ரவத்திக்கு ரெட் சிக்னல் போட்ட கோலி – விவரம் இதோ

varun
- Advertisement -

தோள்பட்டை காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் ஆட வாய்ப்பு கிடைத்தும் ஆட முடியாமல் போன சக்கரவர்த்திக்கு இரண்டாவது வாய்ப்பாக இங்கிலாந்து டி20 தொடரில் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இம்முறை காயத்திலிருந்து முற்றிலும் குணமடைந்து இருந்தாலும் தனது உடல் தகுதியை (யோ-யோ டெஸ்ட்) நிரூபிக்கத் தவறிய காரணத்தினால் மறுபடியும் அந்த வாய்ப்பு பறிபோய் உள்ளது. வரும் சக்கரவர்த்திக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று இந்திய ரசிகர்கள் ஏக்கம் தெரிவித்து வருகின்றனர்.

varun 1

- Advertisement -

இந்நிலையில் இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு விராட்கோலி பதில் அளித்துள்ளார். அதில் அவர் , இந்திய கிரிக்கெட் அணி தற்போது அனைத்து வகை போட்டிகளிலும் மிகச் சிறந்த இடத்திற்கு சென்றுள்ளது என்றால் அது விளையாட்டு வீரர்களின் ஃபிட்னஸ் மற்றும் டெடிகேஷன் தான் என்று சொல்வேன். எப்பேர்ப்பட்ட வீரராக இருந்தாலும் அவருக்கு ஃபிட்னஸ் தேர்வு நடத்தப்படும் அப்படித்தான் நடைபெறும்.

அந்தவகையில் வருண் சக்கரவர்த்திக்கு ஃபிட்னஸ் தேர்வு நடத்தப்பட்டது. இரண்டு கிலோமீட்டர் தூரத்தை 8.5 நிமிடத்தில் அவர் ஓடி முடிக்கவில்லை மற்றும் யோயோ டெஸ்டிலும் குறைந்தபட்ச
புள்ளியான 17.1 புள்ளியும் அவர் பெறவில்லை. இப்படி இருக்க அவரை அணியில் எங்களால் சேர்த்துக் கொள்ள இயலாது.உடற்தகுதி தேர்வில் எப்போது அவர் தேர்ச்சி பெறுகிறார் அப்போதே அணியில் சேர்ந்து கொள்ளலாம் என்று அதிரடியாக விராட் கோலி தெரிவித்துவிட்டார்.

varun

இந்நிலையில் டுவிட்டரின் இந்திய முன்னாள் வீரர் ஹேமங் பதானி , நீங்கள் ஒரு மூன்று முதல் நான்கு மாதங்களாக வீட்டில் இருந்தீர்கள் இவ்வளவு காலம் இருந்த வேளையில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். உங்களது உடல் தகுதியை இன்னேரம் நீங்கள் சரி செய்திருக்க வேண்டுமல்லவா , ஒவ்வொரு வீரனுக்கும் வாய்ப்பு கிடைப்பது என்பது அரிது. அது உங்களுக்கு இரண்டு முறை கிடைத்துள்ளது அந்த இரண்டையும் நீங்கள் தவற விட்டு விட்டீர்கள் என்று வரும் சக்கரவர்த்தியை மிகக் கோபமான முறையில் திட்டி தீர்த்துள்ளார்.

Varun

இந்நிலையில் வருண் சக்கரவர்த்திக்கு ஆதரவாக சில ரசிகர்கள் தங்களது கருத்துகளை சோசியல் மீடியாவில் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருந்தாலும் கோலி பிட்னஸ் விஷயத்தில் எந்தவித சமரசமும் இல்லை என்றும் அணி நிர்வாகத்தின் விதிமுறைகளின் படியே வீரர்களின் தெரிவு நடைபெறும் என்றும் தெளிவாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement