இன்னைக்கு நாங்க..நாளைக்கு யாரு ? 3 ஆவது அம்பயருக்கு எதிராக கடுப்பில் பேசிய கோலி – விவரம் இதோ

Kohli

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் 3வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதிநேரத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் 18 பந்துகளில் 37 ரன்கள் குவித்து அதிரடி காட்ட இந்திய அணி 185 ரன்களை குவித்தது.

INDvsENG

அதன் பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் மட்டுமே குவித்ததால் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-2 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நாளை 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தப் போட்டியின் போது இந்திய வீரர்களான சூரியகுமார் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது விக்கெட்டுகள் மூன்றாவது அம்பயரின் மூலம் தவறாக கொடுக்கப்பட்டதால் போட்டி முடிந்து பெரிய அளவில் சர்ச்சை வெடித்துள்ளது. இது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வர நேற்று போட்டி முடிந்தவுடன் இந்திய அணியின் கேப்டன் கோலி இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

malan

இதுகுறித்து அவர் போட்டி முடிந்து கூறுகையில் : அம்பயர்களின் இதுபோன்ற தவறான முடிவுகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும். விதிகளின் விவரத்தை எளிமையாக்க வேண்டும். மேலும் இதுபோன்ற தவறான முடிவுகளுக்கு தீர்வு காண வேண்டும். இந்த சிக்கல்களில் இருந்து வெளிவந்தால் தான் அது சரியாக இருக்கும். ஏனெனில் முக்கியமான போட்டிகளில் இது போன்ற முடிவுகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

- Advertisement -

Sky

இன்று நாங்கள் பாதிக்கப்பட்டதை போன்று நாளை வேறொரு அணி பாதிக்கப்படும். இன்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டில் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் களநடுவர் சாஃப்ட் சிக்னல் மூலம் அவுட் என்று அறிவிக்கப்பட்டதால் அவர் வேறு வழியின்றி வெளியேற்றப்பட்டார் இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு காணவேண்டும் என்று மூன்றாவது நடுவரின் முடிவு குறித்து கோலி காட்டமாக பேசியது குறிப்பிடத்தக்கது.