இஷாந்த் சர்மா இருந்தும் உமேஷ் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்க இதுவே காரணம் – விராட் கோலி பேட்டி

Umesh
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நேற்று கேப்டவுன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி என்ற 79 குவித்தார்.

Rahane

- Advertisement -

பின்னர் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் சவுத் ஆப்பிரிக்கா அணி தங்களது முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை இழந்து 17 ரன்கள் குவித்துள்ளது. இந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் காயம் காரணமாக விளையாடவில்லை.

அவருக்கு பதிலாக அனுபவ வீரரான உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார். அவரது சேர்க்கை குறித்து டாஸிற்கு பேசிய கேப்டன் விராட் கோலி கூறுகையில் : தசைப்பிடிப்பு காரணமாக சிராஜ் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக தற்போது உமேஷ் யாதவ் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

umesh 1

இஷாந்த் ஷர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்வது கடினம். இருப்பினும் உமேஷ் யாதவ் கடந்த சில போட்டிகளில் அற்புதமாக செயல்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி வலை பயிற்சியின் போதும் சிறப்பாக பௌலிங் செய்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : மைதானத்திலேயே கண் கலங்கி அழுத ராஸ் டெய்லர் – நெகிழ்வைத்த தருணம் (நடந்தது என்ன?)

அதோடு அவரால் நல்ல பீல்டிங்கும் செய்யமுடியும். பேட்டிங்கிலும் ஓரளவு கை கொடுப்பார் எனவே அவரை அணியில் இணைத்தோம் என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement