3 ஆவது டெஸ்ட் தோல்வி : நாங்கள் அடைந்த தோல்விக்கு இதுமட்டும் தான் காரணம் – விராட் கோலி வருத்தம்

Kohli
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று முடிந்தது. கடந்த 11-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்களை குவிக்க தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 13 ரன்களுடனும் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக 212 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Elgar

தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. அதுமட்டுமின்றி மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் எதிர்பாராத தோல்வியை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தோல்வி குறித்து கூறுகையில் :

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடரானது ஒட்டுமொத்தமாக சிறப்பாகவே அமைந்தது. முதல் போட்டியின்போது நாங்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று இருந்தோம். இருப்பினும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் மீண்டுவந்து அடுத்தடுத்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது சிறப்பான ஒன்று. என்னை பொருத்தவரை இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியான அணி தான். நிச்சயம் தென்னாப்பிரிக்க மண்ணில் இதுபோன்று விளையாடுவது மிக சவாலான ஒரு விடயம்.

jansen 1

இந்த மூன்றாவது போட்டியில் நாங்கள் பேட்டிங்கில் செய்த சொதப்பலே தோல்விக்கு காரணமாக அமைந்தது. 30 முதல் 45 நிமிடங்கள் வரை மோசமாக விளையாடி விட்டாலே போட்டி முடிந்து விடுகிறது. தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அதே வேளையில் இந்திய அணி வீரர்களும் சிறப்பாக பந்துவீசினார்கள் என்றாலும் நாங்கள் பேட்டிங்கில் ஒரு யூனிட்டாக பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இதையும் படிங்க : முதல் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இத்தொடரில் செய்துள்ள இமாலய சாதனை – தோனி கூட இதை செய்ததில்லை

நிச்சயம் பந்துவீச்சாளர்களை பற்றி எந்த ஒரு குறையும் கிடையாது, சந்தேகமும் கிடையாது. தோல்வி உங்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கலாம். இருப்பினும் நிச்சயம் இந்திய அணி மீண்டுவந்து வெற்றி பாதைக்கு திரும்பும் என்றும் விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement