முதல் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இத்தொடரில் செய்துள்ள இமாலய சாதனை – தோனி கூட இதை செய்ததில்லை

Pant-2
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த மூன்றாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியை வீழ்த்தி இந்த டெஸ்ட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் வெற்றியுடன் துவங்கிய இந்திய அணியானது நிச்சயம் இந்த தொடரை கைப்பற்றும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அடுத்தடுத்து 2 போட்டிகளில் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரை இழந்தது.

Elgar

- Advertisement -

கை கொடுத்த ரிஷப் பண்ட் :
முன்னதாக இப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 210 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் இந்திய வீரர்கள் பொறுப்புடன் விளையாடுவார்கள் என பார்த்தால் தென்னாப்பிரிக்காவின் சிறப்பான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மடமடவென அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்கள்.

இதனால் 58/4 என இந்தியா திணறிய வேளையில் களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட பொறுப்புடன் பேட்டிங் செய்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்தியாவை காப்பாற்ற போராடினார். ஆனால் எதிரே வந்த மற்ற இந்திய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனதால் இந்தியா வெறும் 198 ரன்களுக்கு சுருண்டது.

pant 2

தூளான விமர்சனம்:
இந்த முக்கியமான இன்னிங்ஸ்சில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 இமாலய சிக்சர்கள் உட்பட சதமடித்த ரிஷப் பண்ட் 100* ரன்கள் விளாசி அசத்தினார். இதன் வாயிலாக தென்னாப்பிரிக்க மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனைகளையும் அவர் படைத்தார்.

- Advertisement -

இந்த தொடரின் ஜொஹன்ஸ்பர்க் நகரில் நடந்த 2வது போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்தியா இதேபோல தடுமாறிய வேளையில் “பொறுப்பே இல்லாமல் ரிஷப் பண்ட் டக் அவுட்டானார்”. அதன் காரணமாக இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் ஜாம்பவான் வீரர்களிடையே அவர் கடும் விமர்சனங்களையும் சந்தித்தார் ஆனால் அதற்கு அடுத்த போட்டியிலேயே அதைவிட மோசமாக இந்தியா தடுமாறிய வேளையில் சதம் அடித்த அவர் தன் மீதான விமர்சனங்களை தூள் தூளாக்கி உள்ளார் என்றே கூறலாம்.

Pant

முதல் முறையாக சாதனை:
நேற்றைய போட்டியில் 6வது பேட்டிங் இடத்தில் களமிறங்கிய அவர் இந்தியா எடுத்த 198 ரன்களில் 100* ரன்கள் குவித்தார். “இதன் வாயிலாக ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி 200 ரன்களுக்கும் குறைவாக அவுட்டான இன்னிங்சில் 6வது இடத்தில் களமிறங்கி சதம் அடித்த முதல் வீரர்” என்ற புதிய சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் டெஸ்ட் போட்டிகளில் 6வது இடத்தில் களமிறங்கிய எந்த ஒரு வீரரும் தங்களது அணி 200 ரன்களுக்குள் அவுட் ஆனபோது சதமடித்ததே கிடையாது. அதேபோல் “200 ரன்களுக்குள் இந்தியா ஆல் அவுட்டான ஒரு இன்னிங்ஸ்சில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர்” என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க : நானா இருந்தா இனி ரஹானேவுக்கு வாய்ப்பே இல்ல. போயி ரஞ்சில ஆடிட்டு வரட்டும் – முன்னாள் கோச் ஆவேசம்

இது மட்டுமல்லாமல் SENA நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளில் அதிக சதங்கள் விளாசிய ஆசிய விக்கெட் கீப்பராகவும் அவர் சாதனை படைத்துள்ளார். சேனா நாடுகளில் அதிக சதங்கள் அடித்த ஆசிய விக்கெட் கீப்பர்கள்: ரிஷப் பண்ட் : 3* சதங்கள். மற்ற விக்கெட் கீப்பர்கள் : 0.

Advertisement