அவரால் எந்த பேட்ஸ்மேனையும் எந்த நேரத்திலும் வீழ்த்த முடியும் – இளம்வீரரை பாராட்டிய கேப்டன் கோலி

kohli
- Advertisement -

இந்திய அணியில் தற்போது வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இந்திய அணி தற்போது அயல் நாட்டிலும் சிறப்பான வெற்றிகளை குவித்து வருகிறது. கடந்த முறை ஆஸ்திரேலிய சென்ற இந்திய அணி அங்கு தொடரை கைப்பற்றிய பின்னர் தற்போது இங்கிலாந்து மண்ணில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அசத்தலான வேகப்பந்து வீச்சு காரணமாகவே கடைசி நாளில் வரலாற்று வெற்றியை சுவைத்தது.

siraj 1

- Advertisement -

தற்போதைய இந்திய அணியில் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா போன்ற அனுபவ வீரர்கள் இருந்தாலும் 27 வயதான இளம் வீரர் முகமது சிராஜ் இந்த இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அவருடைய லைன் அன்ட் லென்த் இங்கிலாந்து வீரர்களை திணற வைக்கிறது.

2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் என இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை அசைத்து பார்த்தார். தற்போது மூன்றாவது போட்டிக்கு முன்னர் பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி முகமது சிராஜ் குறித்து வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Siraj

அவரது வளர்ச்சியை பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் நான் அவரை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். அவர் ஒரு நல்ல திறனுடைய பந்துவீச்சாளர். அவருக்கு நாம் நம்பிக்கை கொடுத்தால் நிச்சயம் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். ஆஸ்திரேலிய தொடரின் போது அவர் வெளிப்படுத்திய சிறப்பான பந்துவீச்சு தற்போதும் தொடர்கிறது. ஆஸ்திரேலிய தொடரில் இருந்து அவர் நல்ல நம்பிக்கையை பெற்று விளையாடி வருகிறார் என்று கோலி கூறினார்.

Siraj-1

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் : சிராஜால் எந்த நேரத்திலும் எந்த ஒரு பேட்ஸ்மேனையும் வீழ்த்த முடியும். அதுமட்டுமின்றி போட்டியின் முடிவிலும் அவரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். அவருடைய இந்த வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கோலி புகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement