அவர் இப்படி பவுலிங் போடுவார்னு நான் நினைக்கவே இல்ல. வெற்றிக்கு காரணம் இவர்தான் – கோலி பாராட்டு

Kohli
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 39 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை மட்டுமே குவித்தது.

RCBvsKKR

- Advertisement -

துவக்க வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பின்னர் எந்த இடத்திலுமே கொல்கத்தா அணியால் சிறப்பாக விளையாட முடியவில்லை. அதிகபட்சமாக மோர்கன் 30 ரன்களையும், லோகீ பெர்குசன் 19 ரன்களை குவித்தனர். பெங்களூரு அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தா அணி சுருண்டது என்றே கூறலாம்.

அதன் பின்னர் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா பெங்களூரு அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 85 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் படிக்கல் 25 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் குர்கீரத் சிங் 21 ரன்களும், விராட் கோலி 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணியின் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

rcb

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கோலி கூறுகையில் : உண்மையிலேயே நான் சிராஜை பந்துவீச அழைக்க நினைக்கவில்லை. புது பந்தில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் மோரிஸ் ஆகியோரை தான் பந்துவீச அழைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் டாசின் போது பிட்ச் ட்ரையாக இருந்ததால் நிச்சயம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும் என்று நினைத்தேன். அதனாலேயே சிராஜிடம் புது பந்தை கொடுத்தேன். அவரும் பந்தை ஸ்விங் செய்ய முயற்சித்தார்.

- Advertisement -

அதன் பலனாக இன்று ஆட்டத்தை அப்படியே திருப்பி விட்டார். இந்த போட்டியில் நாங்கள் இரண்டு திட்டத்தை வைத்திருந்தோம். திட்டம் எதுவாக இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்து நாங்கள் இந்த போட்டியில் சரியாக செயல்பட்டோம் என்று கூறினார். சிராஜ் பந்துவீச்சு எங்களது அணிக்கு வெற்றிக்கு காரணமாக இருந்தது என்றும் கோலி குறிப்பிட்டிருந்தார்.

siraj

அதுமட்டுமின்றி கடந்த வருடம் அவருக்கு மிக மோசமாக அமைந்திருந்தது. ஆனால் அதையெல்லாம் அவர் மனதில் வைத்துக் கொள்ளாமல் கடந்த ஓராண்டாக கடினமாக பயிற்சி செய்து தற்போது மீண்டும் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்பியுள்ளார். அதற்கான பதில்தான் இன்றைய போட்டியில் அவருக்கு கிடைத்தது மேலும் இதனை அவர் தொடர வேண்டும் என்று தான் விரும்புவதாக கோலி கூறியிருந்தார்.

Advertisement