இவரோட பந்துவீச்சில் அடிவாங்குனா அவ்ளோதான் உயிரே போய்டும். குலைநடுங்க வைக்கும் பவுலர்னா அது இவர்தான் – கோலி வியப்பு

Kohli-1
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனும், முன்னணி வீரரான விராட் கோலி பேட்டிங்கில் சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்து வருகிறார். தனது பேட்டியின் மூலம் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தி வரும் கோலி தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது உலகின் நம்பர் ஒன் வீரராக திகழ்கிறார். தற்போதைய கால கட்டத்தில் பேட்டிங்கில் அவரை அடித்துக் கொள்ள ஆளில்லை என்று கூறும் அளவிற்கு அவர் தனது பேட்டிங் மூலம் கிரிக்கெட் உலகினை கட்டிப் போட்டுள்ளார் என்றால் அது மிகையாகாது.

Kohli-2

- Advertisement -

மேலும் இந்திய அணியின் மூன்று வகை கிரிக்கெட்டிலும் ரன் குவிப்பது மட்டுமின்றி அணியை வழி நடத்துவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பந்துவீச்சாளர்கள் கோலி ரன் குவிப்பதை தடுத்து நிறுத்துவது சிரமம் என்று கலங்கி வரும் நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் விராட் கோலியை வீழ்த்த முடியும் என்று பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும் உலகிலேயே அதிவேக பந்து வீச்சாளர் என்று பெயர் பெற்றவருமான அக்தர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வர்ணனையாளராகவும், யூடியூப் சேனல் மூலம் கிரிக்கெட் கருத்துக்களை கூறும் விமர்சகராகவும் அவர் பல கருத்துகளை ரசிகர்களுக்கு முன்வைத்து வருகிறார்.

Akhtar

அந்த வகையில் தற்போது சமூக வளைதளத்தில் விராட் கோலி அவுட் செய்வது எப்படி என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கு பதிலளித்த அக்தர் : விராட் கோலிக்கு ஒருவேளை நான் பந்து வீசினால் பவுலிங் கிரீசை முழுவதுமாக பயன்படுத்தி பந்துவீசுவேன் அப்போது பந்து ஸ்டம்புக்கு வெளியே ஸ்விங் ஆகி செல்லும் அந்த பந்தை அடிக்க முடியாது. அப்புறம் அவர் அவுட்டாக முடியவில்லை என்றால் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அவரை அவுட்டாக்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் அக்தரின் இந்த கருத்து குறித்து அவரிடம் கேட்டபோது கோலி கூறியதாவது : நான் இதுவரை சோயிப் அக்தரின் பந்துவீச்சில் விளையாடியதில்லை. ஆனால் இலங்கை தம்புலாவில் நடைபெற்ற போட்டியில் அவர் பந்து வீசுவதை நேரில் பார்த்திருக்கிறேன் அந்த போட்டியில் நான் விளையாடினாலும் அவரது பந்து வீச்சை எதிர்கொள்ளவில்லை.

Akhtar 1

இதுவரை நான் அவரின் பந்துவீச்சுக்கு எதிராக விளையாடியதில்லை என்பதனால் அவுட் ஆனதும் இல்லை. ஆனால் அவரின் வேகம் என்னை வியக்கச் செய்தது. அப்படி ஒரு வேகத்தில் வரும் பந்து உடம்பில் பட்டால் என்னவாகும் என்பதை சிந்தித்தேன். மிகபயங்கரமான காயத்தை அவரது வேகம் ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement