ஆர்.சி.பி அணியால் ஒருமுறை கூட ஐ.பி.எல் கோப்பையை வெல்ல முடியாததற்கு இதுவே காரணம் – ஓபனாக பேசிய கோலி

Kohli-1
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் வரவேற்பினை பெற்ற இந்த ஐபிஎல் தொடருக்கு ஆண்டிற்கு ஆண்டு வரவேற்பு அதிகரிக்க தற்போது 13 ஆவது ஆண்டாக இந்த ஆண்டு விமர்சையாக நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Ipl cup

- Advertisement -

மார்ச் மாதம் 29ஆம் தேதி துவங்க இருந்த இந்த தொடர் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டதாக பிசிசிஐ தலைவர் கங்குலி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை என்பதனால் இந்த தொடர் ரத்தாக அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக தற்போது வீரர்கள் அனைவரும் தங்களது ஓய்வு நேரத்தை வீட்டிலிருந்து ரசிகர்களுக்கு தங்களது அனுபவங்களை வழங்குவதன் மூலம் கழித்து வருகின்றனர். அதன்படி தற்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் உடன் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் கோலி கூறியதாவது : ஆர்சிபி அணி ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாதது குறித்து பேசிய போது அவர் : ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடங்கும் போது இந்த ஆண்டு வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பெங்களூரு அணியை களமிறக்குகிறோம். அந்த எண்ணம் தான் நாங்கள் கோப்பையை வெல்ல முடியாமல் போவதற்கு முதற்காரணமாக அமைகிறது.

- Advertisement -

ஏனெனில் முதலில் கோப்பையை வெல்லும் எண்ணத்தால் அழுத்தம் அதிகரிக்கிறது. முதலில் அந்த அழுத்தத்தை விடுத்து ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரில் மகிழ்ச்சியான எண்ணத்துடன் விளையாட வேண்டும் என்று கோலி கூறினார். ஏனெனில் ஒவ்வொரு முறையும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அழுத்தத்திலேயே நாங்கள் தொடரை இழுந்து வெளியேறுகிறோம்.

Abrcb

மேலும் தொடர்ந்து பேசிய கோலி ஆர்சிபி அணியில் நான், ஏபி டிவிலியர்ஸ், கிறிஸ் கெய்ல் ஆகியோர் சிறப்பாக விளையாடி உள்ளோம். ஐபிஎல் தொடரில் மூன்று முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினோம். ஆனால் ஒருமுறைகூட கோப்பையை வெல்ல முடியவில்லை இருந்தாலும் நாங்கள் நிச்சயம் சிறந்த அணி. கோப்பையை வெல்லும் தகுதி எங்களுக்கு இருக்கிறது அது விரைவில் நடக்கும் என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்து.

Advertisement