பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் இந்த ஒரு விடயம் நடக்காததில் வருத்தம் தான் – கோலி ஓபன் டாக்

Kohli-1

ஐபிஎல் தொடரில் 55 ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், விராட்கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

DCvsRCB

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 152 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் படிக்கல் 50 ரன்களும், டிவில்லியர்ஸ் 35 ரன்களும் குவித்தனர். டெல்லி அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய நோர்க்கியா 3 விக்கெட்டுகளையும், ரபாடா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதன்பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரஹானே 60 ரன்களும், ஷிகர் தவான் 54 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக நோர்க்கியா தேர்வு செய்யப்பட்டார்.

dhawan

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : போட்டியில் டாஸை இழந்தால் வெற்றிக்கான வாய்ப்பை நீங்கள் தான் உருவாக்க வேண்டும். இந்த போட்டியில் 11 ஆவது ஓவர் வரும்போது 17.3 ஓவர்கள் என்ற கணக்கை அணி நிர்வாகம் எங்களுக்கு நினைவு படுத்தினார்கள். அதன்படி இந்த போட்டியின் மிடில் ஓவர்களில் நாங்கள் அவர்களின் ரன்குவிப்பை தடுத்து நிறுத்தினோம்.

- Advertisement -

இருப்பினும் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு சென்று இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். இறுதிப்போட்டிக்கு செல்ல இன்னும் 2 போட்டிகள் உள்ளன வரும் வாய்ப்புகளை நாங்கள் சரியாக பயன்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் உங்களுக்கு அடுத்த போட்டியில் ஆச்சரியம் காத்திருக்கும்.

Kohli-ABD

எங்கள் அணியின் இன்னும் நிறைய திறமையான பேட்ஸ்மேன்கள் இன்னும் இருக்கின்றனர். பந்துவீச்சிலும் நாங்கள் ஓரளவு சிறப்பாகவே இருக்கிறோம். எனவே வரும் ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் அது இன்னும் சில நாட்களில் உங்களுக்கு தெரியும் என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.