இந்த ஆண்டு ஆர்.சி.பி அணிக்காக கிடைத்த 2 அற்புதமான வீரர்கள் இவர்கள் தான் – கோலி பெருமிதம்

Kohli-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

SRHvsRCB

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 56 ரன்களையும், பின்ச் 32 ரன்களை குவித்தனர். அவர்களைத் தவிர மற்ற யாரும் சிறப்பாக விளையாடவில்லை. சன்ரைசர்ஸ் அணி சார்பாக ஹோல்டர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன் பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 24 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி அடுத்து டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

holder

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து தனது வருத்தத்தை கோலி வெளிப்படுத்தி இருந்தாலும் இந்த தொடரில் இரண்டு வீரர்கள் பெங்களூர் அணிக்காக கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி புதிய வீரர்களாக துவக்க வீரர் படிக்கல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதாக கோலி தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்த சீசனில் 400க்கும் மேற்பட்ட ரன்களை எந்தவித சிரமமுமின்றி குவித்துள்ளார். ஆனால் அது எளிதான விடயம் அல்ல என்றும் கூறியுள்ளார். மேலும் சிராஜ் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி உள்ளார் என்றும் அவர்கள் இருவரையும் பெருமைப்பட பேசியுள்ளார். மேலும் அவர்கள் இருவரும் இந்த ஆண்டுக்கான சிறந்த கண்டுபிடிப்பாக கோலி தனது கருத்தினை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement