- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இனிமேல் இப்படி நடக்க கூடாது. இந்திய அணியில் இனி அதிரடி மாற்றங்கள் இருக்கும் – விராட் கோலி திட்டவட்டம்

இந்திய டெஸ்ட் அணி கடந்த சில வருடங்களாக புவனேஸ்வர் குமார், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டே டெஸ்ட் போட்டிகளை சந்தித்து வருகிறது. இதில் ஜஸ்பிரித் பும்ராவைத் தவிர அனைவருக்கும் கிட்டத்தட்ட 30 வயது ஆகிறது.

மேலும் இந்த ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்திருப்பதால் ஒருவர் காயமடைந்தால், அணிக்கு சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. அப்படித்தான் புவனேஸ்வர் குமார் நியூசிலாந்து தொடரில் ஆட முடியவில்லை. அவர் இருந்திருந்தால் நியூசிலாந்து ஆடுகள்த்தில் அதற்கு ஏற்ப அவர் அற்புதமாக பந்துவீசி இருப்பார்.

அதேநேரத்தில் இஷாந்த் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டு உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார்.
இப்படி காயம் அடைந்தால் என்ன செய்வது என்று தெரியாமல் இந்திய அணி தத்தளித்து வருகிறது. இது குறித்து விராட் கோலி கூறுகையில் :

தற்போது இந்திய அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர்களின் வயது அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனை நாம் கவனமாகவும் மிக விழிப்புடன் கையாளவேண்டும் . அவர்களுக்கான மாற்று வீரர்களை எப்போதும் தயார் செய்து வைத்து களத்தில் விளையாட வைக்க தயாராக இருக்க வேண்டும்.

அடுத்து வரும் இளம் மூன்று அல்லது நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை கண்டறிவது அவசியம். காயத்தால் விளையாட முடியாத சூழ்நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். நவதீப் சைனி கண்டிப்பாட அடுத்த சில போட்டிகளில் ஆடுவார். இன்னும் மூன்று பந்துவீச்சாளர்கள் மீது நாங்கள் பார்வை வைத்துள்ளோம் அவர்களை சர்வதேச அளவுக்கு கொண்டு வருவோம் என்று கூறியுள்ளார் விராட் கோலி.

- Advertisement -
Published by