இவர் மட்டும் அவுட் ஆகாமல் இருந்திருந்தா இன்னும் 2 ஓவர் முன்னாடியே நாங்க ஜெயிச்சிருப்போம் – கெத்தாக பேசிய கோலி

Maxwell
- Advertisement -

ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவரின் கடைசி பந்தில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

RcbvsMi-1

- Advertisement -

இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ் 48 ரன்களையும், மேக்ஸ்வெல் 39 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோன்று இந்த தோல்வியின் மூலம் மும்பை அணி கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோற்று ஒரு மோசமான சாதனையை சந்தித்துள்ளது.

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் கோலி கூறுகையில் : கடந்த ஆண்டு நாங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்தோம் அந்த வகையில் இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சி. மும்பை போன்ற ஒரு வலுவான அணிக்கு எதிராக இந்த வெற்றி சிறப்பான ஒன்று. இந்த போட்டியில் எங்களது அணி வீரர்கள் அனைவருமே சிறப்பான பங்களிப்பை அளித்தனர். 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி என்பது அனைவரும் விளையாடிய ஒரு போட்டிக்கு கிடைத்த வெற்றியாகவே இருக்கிறது.

harshal

இந்த போட்டியின் மைதானம் முதல் பாதியில் சிறப்பாக இருந்தது. இரண்டாவது பாதியில் பந்தினை சரியாக கணித்து அடிக்க சற்று கடினமாக இருந்தது. அதனாலேயே மேக்ஸ்வெல் மற்றும் நான் மேக்ஸ்வெல் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரது பார்ட்னர்ஷிப் இந்த போட்டிக்கு முக்கியமாக அமைந்தது. சென்னை போன்ற மைதானத்தில் பீல்டர்களுக்கு இடையில் அடித்து ரன்களை ஓடி எடுப்பது சேஸிங்கில் ஒரு சாதகமான விஷயமாக இருக்கும். மும்பை அணியில் ரோகித் விரைவில் ஆட்டம் இழந்தும் அவர்கள் சிறப்பாக போட்டியில் திரும்பி வந்தனர்.

- Advertisement -

பேட்டிங்கிலும் எங்களது வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மேக்ஸ்வெல் அவருடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஒரு கேம் சேஞ்சர் அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் போட்டி இன்னும் இரண்டு ஓவர்கள் முன்னதாகவே முடிந்திருக்கும். ஏபி டிவில்லியர்ஸ் பலவருடங்களாக எங்கள் அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருடைய அனுபவம் எப்போதும் எதிரணிக்கு தொல்லை கொடுக்கும் வகையில் தான் இருக்கும் என்று கோலி வெற்றிக்கான காரணங்களைப் பற்றி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

maxwell

வழக்கமாகவே இறங்கியவுடன் பந்துகளை பார்க்காமல் அதிரடி காட்டும் மேக்ஸ்வெல் நேற்றைய போட்டியில் சரியான பந்துகளை மட்டும் தேர்வு செய்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஏற்கனவே ஐ.பி.எல் தொடரில் அவருக்கான ஏலத்தொகை அதிகம் என்று பலரும் விமர்சித்த வேளையில் நேற்று தனது நிதானமான அதிரடி ஆட்டத்தின் மூலம் அவர் மீது இருந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மேக்ஸ்வெல். அதுமட்டுமின்றி இனிவரும் போட்டிகளில் அவர் இப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அது பெங்களூரு அணிக்கு பெரிய பலத்தை அளிக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.

Advertisement