எங்களுடைய மிகப்பெரிய தோல்வி இதுதான். தோல்விக்கு காரணம் இதுதான் – கோலி பேட்டி

Kohli-1
- Advertisement -

நேற்று மதியம் 4 மணிக்கு துவங்கிய 11 ஆவது ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு அணி மற்றும் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி வார்னர் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோரின் சதத்தால் 20 ஓவர்களில் முடிவில் 231 ரன்களை குவித்தது.

Srh

- Advertisement -

அதன்பிறகு 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 113 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் சன் ரைசர்ஸ் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக நபி 4 ஓவர்கள் வீசி 11 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டி முடிந்த பிறகு தோல்வி குறித்து பேசிய கோலி : இந்த தோல்வி எங்களது அணிக்கு மிகப்பெரிய தோல்வியாகும். இந்த தோல்வி குறித்து நான் எதையும் கூறவிரும்பவில்லை. முதல் பந்தில் இருந்து கடைசி விக்கெட் வரைக்கும் எங்கள் அணிக்கு ஒரு இடத்தில் கூட வாய்ப்பு கிடைக்கவே இல்லை. தோல்வி தான் இந்த போட்டியில் கிடைக்கும் என்று தெரிந்துவிட்டது. சன் ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் எங்களது அணியின் வெற்றியை முற்றிலுமாக பறித்துவிட்டனர்.

Warner

எங்கள் அணியில் நானும் டிவில்லியர்ஸும் களத்தில் இருக்கும் போது அதிக அளவு பிரஷரை உணர்ந்தோம். அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது பொறுப்பினை உணர்ந்து அவர்களும் அணிக்காக பங்களிப்பினை அளிக்கவேண்டும். இன்னும் 11 போட்டிகள் இருக்கின்றன. வரும் போட்டிகளில் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திருப்புவோம் என்று கோலி கூறினார்.

Advertisement