கப் ஜெயிக்குறோமா இல்லையோ. பெங்களூரு அணிக்காக நான் இந்த ஒரு உத்திரவாதத்தை மட்டும் தருகிறேன் – கோலி நெகிழ்ச்சி

Kohli-1
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் இருந்து தற்போது வரை தொடர்ந்து பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். அந்த அணியில் இருந்து பல வீரர்கள் மாறினாலும் இவர் ஒருவர் மட்டும் அதே அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் பெங்களூரு அணி நிர்வாகமும் அவரை மட்டுமே தக்க வைத்து வருகிறது. குறிப்பாக 2011 ஆம் ஆண்டு ஏலத்தில் பெங்களூர் அணி அனைத்து வீரர்களையும் ஏலத்தில் விட்டுவிட்டு இவரை மட்டும் தக்க வைத்துக்கொண்டது.

rcb

- Advertisement -

மேலும் பெங்களூரு அணியில் அவ்வப்போது கெய்ல், டிவில்லியர்ஸ், வாட்சன், டிகாக் என பல முன்னணி வீரர்கள் இடம் பெற்றாலும் அந்த அணியால் பெரிய பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. 2013 ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி பெங்களூரு அணியை அதிகபட்சமாக ஒரு முறை 2016 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்று இரண்டாம் இடத்தை பிடிக்க வைத்தார்.

அதைத் தவிர எந்த ஒரு சீசனிலும் சாதிக்கவில்லை. அனைத்து தொடர்களிலும் கிட்டத்தட்ட கடைசி கட்ட நிலைமையிலேயே படுதோல்வி அடைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் இந்த சீசனில் பெங்களூரு அணியின் விளையாட்டைக் காண ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு முறையும் இந்த அணியின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு இந்த ஆண்டும் அதிகபட்சமாக இருக்கிறது.

Rcb

இருப்பினும் பெங்களூர் அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லாதது ரசிகர்களிடம் பல ஆண்டு குறையாக காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் குறித்து பேட்டியளித்துள்ளார் கேப்டன் கோலி. இது குறித்து அவர் கூறுகையில் : எந்த ஒரு வீரரும் கோப்பையை வெல்வது என்பது மிக முக்கியமாகும். அதைவிட அணியின் மேலுள்ள விசுவாசம் என்பது பெரியதாக இருக்க வேண்டும்.

அணி வீரர்கள் அனைத்துக்கும் தயாராக இருக்கின்றனர். இந்த வருடம் ஐபிஎல்லில் என்ன நடக்கும் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன் என்று கோலி குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கோலி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி குறித்து கூறுகையில் : என்ன நடந்தாலும் ஐபிஎல் தொடரில் நான் விளையாடும் முறை பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடுவேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement