சென்னை அணிக்கு எதிரான எங்களின் இந்த தோல்விக்கு ஒரே ஓரு காரணம் தான் – விராட் கோலி வெளிப்படை

Kohli
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 44 ஆவது லீக் போட்டியில் நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக தீர்மானித்தார்.

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக விராட் கோலி 50 ரன்களும், டிவில்லியர்ஸ் 39 ரன்களையும் குவித்தனர். சென்னை அணி சார்பாக சாம் கரன் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் துவக்க வீரராக விளையாடிய ருதுராஜ் 51 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கேப்டன் தோனியும் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஒரு ஆறுதலான வெற்றியை அடைந்துள்ளது.

csk

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் கோலி கூறுகையில் : இந்த போட்டியின் 2வது இன்னிங்சில் பிட்ச் எப்படி இருந்தது என்பதை நாம் பார்த்தோம். நாங்கள் பேட்டிங் செய்யும் போது டிரைவ் அடிக்க முடியாத மாதிரி பந்துகள் வந்தன. அவர்கள் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் பந்துகளை வீசி எங்களை கட்டுப்படுத்தினர்.

- Advertisement -

140 மேலான ரன்கள் இந்த போட்டியில் சவாலான இலக்கு என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் நாங்கள் அடிக்க நினைத்தது 150 ரன்களுக்கு மேலாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். இருப்பினும் பேட்டிங்கில் நாங்கள் சரியாக செயல்படவில்லை. எந்த போட்டியிலும் சிறப்பாக செயல்பட தயாராக இருக்க வேண்டும் ஏனெனில் அனைத்து அணிகளிலும் நல்ல நல்ல பிளேயர்கள் உள்ளனர்.

Gaikwad 3

போட்டியின் அன்றைய நாளில் எப்படி செயல்படுகிறீர்களோ அதற்கு ஏற்றாற்போல் தான் முடிவுகளும் கிடைக்கும். நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடினோம் அதேபோன்று இது போன்ற ஒரு சில போட்டிகளை தோற்கும் போது அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என கோலி கூறினார்.

Advertisement