- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியின் இந்த தோல்விக்கு இது ஒன்னு மட்டும் தான் காரணம் – வெளிப்படையாக ஒப்புக்கொண்ட கோலி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக துவக்க வீரர் பின்ச் 114 ரன்களையும், ஸ்மித் 105 ரன்களும், டேவிட் வார்னர் 69 ரன்களை குவித்தனர், இதன் பின்னர் 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டும் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 76 பந்துகளில் 90 ரன்களையும், ஷிகர் தவான் 74 ரன்களும் குவித்தனர். மற்ற யாரும் 30 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஜாம்பா சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : நாங்கள் இந்த போட்டிக்காக தயாராக போதிய நேரம் இருந்தும் எங்களால் சரியாக செயல்பட முடியவில்லை. இதற்கு நாங்கள் எந்தவித சாக்குப் போக்கும் கூறமுடியாது. ஆஸ்திரேலிய அணி போன்ற டாப் கிளாஸ் அணிகளுக்கு எதிராக விளையாடும் போது வாய்ப்புகளை தவற விடக்கூடாது. அவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்கள் உங்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி விடுவார்கள்.

அதுமட்டுமின்றி நம் அணியில் பந்துவீச கூடிய ஒரு ஆல்ரவுண்டர் இல்லாததால் இந்த தோல்வி ஏற்பட்டது. நிச்சயம் அணியில் ஒரு ஆல்ரவுண்டர் 6 ஆவது பந்துவீச்சாளராக இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டாய்னிஸ் மேக்ஸ்வெல் போன்றோர் ஆறாவது பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகின்றனர். பாண்டியா இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்தார். பேட்டிங்கில் கவனம் செலுத்தி சிறப்பாக விளையாடினால் மட்டுமே இனி வரும் போட்டிகளில் வெற்றி காண முடியும் என கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by