நான் ஆட்டமிழந்ததும் அவ்ளோதானு நெனச்சேன். ஆனால் இவர்கள் இருவரும் வெற்றியை பரிசாக கொடுத்தார்கள் – கோலி பாராட்டு

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 89 ரன்கள், பொல்லார்ட் ஆட்டமிழக்காமல் 74 ரன்களும் குவித்தனர்.

Jadeja 1

- Advertisement -

அதன்பிறகு 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 48.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கோலி 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 39 ரன்களுடனும் தாகூர் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இந்திய அணி வெற்றிபெற வைத்தனர். ஆட்டநாயகனாக கோலியும் தொடர் நாயகனாக ரோஹித்தும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

போட்டி வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : இதேபோன்று இறுக்கமான போட்டிகளை பல முறை வென்று இருக்கிறோம். இந்தப்போட்டியில் தேவையானது எல்லாம் சரியான பார்ட்னர்ஷிப் நமது பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தால் எதிரணியில் தடுமாற்றம் ஏற்படும். நான் ஆட்டமிழந்து வெளியேறியபோது ஜடேஜா வெற்றியில் உறுதியாக இருந்தார். மேலும் ஷர்துல் மற்றும் ஜடேஜா ஆகியோர் போட்டியை முடித்து கொடுத்தது பார்ப்பதற்கு நன்றாக இருந்தது.

Jadeja

நான் ஆட்டமிழந்து வெளியேறிய போது எனக்குள் இருந்த பதட்டம் ஜடேஜாவிடம் காணப்படவில்லை. அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர் என்று கோலி கூறினார். மேலும் இந்திய அணியில் தற்போது வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால் வெளிநாட்டு தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று வருகிறது. வெளிநாடுகளில் வெற்றி பெற முழு காரணம் அவர்களே இந்திய அணி தற்போது நல்ல நிலைமையில் உள்ளது என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement