ரோஹித், ராகுல் சிறப்பாக ஆடினார்கள். ஆனால் இந்த இருவர் பிரித்து எடுத்தனர் – கோலி பாராட்டு

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர்.

Ind

- Advertisement -

அதன்பின்னர் 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வெஸட் இண்டீஸ் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. ஆட்டநாயகன் விருது 159 ரன்கள் குவித்த ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது

போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : மும்பை போட்டியுடன் சேர்த்து கடந்த 3 போட்டிகளும் மிகச் சிறப்பான போட்டிகளாகும். இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக பேட் செய்தோம். முதல் பாதி பாதியில் எப்போதும் எங்கள் பேட்டிங் நன்றாக இருக்கும் இன்று இரண்டாம் பாதியிலும் அந்த பிரச்சனை இல்லாமல் இருந்தது.

Pant

எப்பொழுதும் அணி 40 முதல் 50 ரன்கள் அதிகமாக அடித்திருந்தால் அது அணிக்கு நல்லதுதான். இன்று ரோகித் மற்றும் ராகுல் நல்ல அடித்தளம் அமைத்தனர் அவர்களின் பார்ட்னர்ஷிப் அருமையாக இருந்தது. பின்னர் இறுதியில் ஐயர் மற்றும் பண்ட் இருவரும் ஆடிய விதம் ஆட்டத்தை திருப்பியது. குறிப்பாக 46,47 அந்த 2 ஓவர்களில் அவர்கள் அடித்த 55 ரன்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி நிச்சயம் போட்டிக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று நான் கூறுவேன்.

Iyer

அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். இப்படி ஆடும் போது தான் முதலில் பேட்டிங் செய்யும்போது நம்பிக்கை ஏற்படும். சேசிங்கில் இந்திய அணி எவ்வளவு பலமாக இருக்கிறதோ அதனை போன்று இனி முதல்பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படும் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement