இனி அஸ்வின் மற்றும் ஜடேஜாவை மட்டம் நம்பி இருக்கப்போவதில்லை – கோலி ஓபன் டாக்

Kohli

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் அஷ்வின் 7 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்.

Ind 1

இந்நிலையில் இந்த போட்டி குறித்து பேட்டியளித்த கோலி இந்திய அணி பந்து வீச்சு குறித்து பேட்டி ஒன்றினை அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது : இந்த போட்டியில் இந்திய அணி பந்து வீச்சில் தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. அதிலும் குறிப்பாக முதல் இன்னிங்சில் அஸ்வின் மற்றும் ஜடேஜா அசத்தினார்கள்.

மேலும் அடுத்ததாக இரண்டாவது இன்னிங்சில் ஷமி சிறப்பாக பந்து வீசினார். பொதுவாக இந்தப் பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. இருப்பினும் இது போன்ற மைதானங்களில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீச முடியும் என்பதை நிரூபித்து காட்டினார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

IND

குறிப்பாக இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிவருகிறார்கள். எனவே இனி வரும் காலங்களிலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு உலக அணிகளுக்கு சவால் விடும் வகையில் சிறப்பாக இருக்கும் அவர்களுக்கு இடையேயான இந்த போட்டி இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.