எனக்கு குல்தீப் யாதவும், தோனியும் ஒன்றுதான். வித்தியாசமான பதில் மூலம் இந்திய அணியின் ஓய்வறை நிலவரத்தை சுட்டிக்காட்டிய – விராத் கோலி

Kohli
- Advertisement -

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 21ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மூன்று வடிவ கிரிக்கெட் இருக்கும் மீண்டும் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு பேட்டி ஒன்றினை அளித்த கேப்டன் கோலி இந்திய அணியின் ஓய்வறை நிலவரம் குறித்து கூறியதாவது :

இந்திய அணிக்கு இந்த தொடர் மிக முக்கியமானது. உடை மாற்றும் ஓய்வு அறையில் மற்றவர்களை திட்டும் பணி எனக்கு எப்போதும் இருந்ததில்லை. நிம்மதியாக ஓய்வறையில் இருக்கிறோம் ஏன் என்றால் உடை மாற்றும் அறையில் குல்தீப் யாதவுடன் நான் எப்படி இருக்கிறேனோ அதே போன்று தான் வயது வித்தியாசமின்றி தோனியுடன் நட்பாக இருக்கிறேன்.

Kohli

எனவே இந்தியா அணியில் யார் என்ன வேண்டும் என்றாலும் மற்ற வீரர்களுடன் பேசலாம். எங்களுக்குள் எந்த பாகுபாடும் இல்லை. இந்திய அணியின் ஓய்வறையில் எப்போதும் நல்ல சூழலே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து உள்ளோம் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது

Advertisement