எங்களின் இந்த சிறப்பான வெற்றிக்கு இதுவே காரணம் – கோலி மகிழ்ச்சி

- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய தனது முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Ind

- Advertisement -

அதன் பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாலோ ஆன் கொடுக்க மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில் 132 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நான்காம் நாளான இன்று மேலும் ஒரு ரன் சேர்த்து 133 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : இந்த தொடரில் இந்திய அணி வீரர்களின் செயல்பாடு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மேலும் இம்முறை ஒரு ஒட்டுமொத்த அணியாக நாம் பெருமைப்பட வேண்டும் அந்த அளவிற்கு இந்தியாவில் நடைபெறும் போட்டியாக இருந்தாலும் சரி வெளிநாடுகளில் நடைபெறும் போட்டியிலும் சரி இந்திய அணி மற்ற அணிகளுக்கு கடுமையான போட்டியை தருகிறது.

Umesh

மேலும் அணி வீரர்கள் இடையே உள்ள நல்ல சூழ்நிலை அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வைக்கிறது. இந்த தொடர் எங்களுக்கு சிறப்பான ஒன்றாகும் உலகின் சிறந்த அணியாக இந்திய அணி இருப்பதற்கு இந்த தொடர் ஒரு உதாரணம். நம் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர் முன்பு சுழற்பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரு பிரிவுகளில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பலமாக இருக்கும்.

Umesh

ஆனால் கடந்த சில வருடங்களாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு இந்திய அணிக்கு பலம் சேர்த்துள்ளது. நம்முடைய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பந்துவீசுகின்றனர். இஷாந்த் சர்மா மட்டுமே நம் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர் அவரைத் தொடர்ந்து தற்போது இளம் வீரர்களின் வேகப்பந்து வீச்சிலும் அனல் பறக்கிறது. இவை அனைத்தும் சேர்ந்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவுகிறது என்று நான் நினைக்கிறேன் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement