இந்திய அணி தற்போது அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வலைதள நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அதில் கிரிக்கெட் மற்றும் தனது ஆரம்ப கால கல்வி குறித்து கோலி கருத்து தெரிவித்துள்ளார். அதில் கோலி குறிப்பிட்டதாவது : 2009 ஆம் ஆண்டு நான் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான பிறகு உடல் எடை காரணமாக 2012ம் ஆண்டில் இருந்து என்னுடைய உடற்பகுதியில் அதிக கவனம் செலுத்தினேன். அத்துடன் அன்றிலிருந்து கடுமையாக உழைக்கத் தொடங்கினான்.
அதிலிருந்து ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினேன். என்னுடைய இந்த கிரிக்கெட் வாழ்வில் நான் இவ்வளவு கஷ்டப்பட்டாலும் திருப்தி அடைந்துள்ளேன் என்பது உண்மை. அதேபோன்று நான் கிரிக்கெட்டில் கஷ்டப்படுவதை விட பள்ளி படிக்கும்போது கணக்கு பாடத்தில் தேர்ச்சி பெற எடுத்த கஷ்டம் தான் அதிகம். அதுவும் குறிப்பாக பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்தில் நான் தேர்ச்சி பெற மிகவும் கடினமாக உழைத்தேன்.
அந்த அளவுக்கு நான் கிரிக்கெட்டில் கூட உழைத்தது கிடையாது என்றே கூறலாம். பொதுவாக கணித பாடத்தில் 100 மதிப்பெண்கள் என்றால் நான் 3 மதிப்பெண்கள் தான் எடுப்பேன். எனக்கு கணிதம் எளிதாக புரியாது. எப்படியோ ஒருவிதமாக கஷ்டப்பட்டு பத்தாம் வகுப்பு கணித பாடத்தை முடித்தேன் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.